"தொப்பை" வராமல் இருக்க.. இரவு டின்னர் எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? மருத்துவர்கள் விளக்கம்
டெல்லி: நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது டின்னர் தான். இரவு குடும்பத்துடன் விரும்பிய உணவை டின்னர் சமயத்திலேயே நம்மால் சாப்பிட முடியும். அதேநேரம் சரியான நேரத்தில் டின்னர் சாப்பிடத் தவறினால் அது உடலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். எனவே, தொப்பை ஏற்படுவதைத் தடுக்க நாம் டின்னரை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது முக்கியமாகும்.
நம்மில் பலருக்கும் காலை எழுந்து உணவைச் சாப்பிடுவதே போராட்டமாகவே இருக்கும். ஆபீஸுக்கு கிளம்பும் அவசரத்தில் நமக்குப் பல நேரம் காலை உணவாக டீ அல்லது காபி மட்டுமே இருக்கும். சில நேரங்களில் அதையும் குடிக்காமல் ஆபீசுக்கு ஓடுவோம்.

அதேநேரம் மறுபுறம் இரவு டின்னர் என்பது நம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும். இன்னைக்கு ஒரு புடி என்ற ரேஞ்சில் வெளுத்து வாங்குவோம். காலையில் இருந்து ஓடி விட்டு இரவு வயிறு முழுக்க டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் செல்வதே ஒரு தனி பீலிங் தான்.
டின்னர்: ஆனால், இது உடலுக்கு நல்லது இல்லையாம்.. இது உங்களது வழக்கமாக இருந்தால் அதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதே உண்மை. டின்னர் என்பது எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதாக இருக்கக் கூடாது. சரியான நேரத்தில் டின்னரை முடித்துவிட வேண்டும். இல்லையென்றால் அது உடலில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எப்போது: சரி டின்னர் சாப்பிடச் சிறந்த நேரம் எது எனக் கேட்கிறீர்களா.. நாம் தூங்கச் செல்லும் முன்பே.. மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் இரவு உணவைச் சாப்பிட்டு இருக்க வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே சாப்பிடுவது உடலில் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும், தூக்கத்தைச் சீர்குலைக்கும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார். மேலும், சீக்கிரம் சாப்பிடுவது நமது உடல் ஊட்டச்சத்துக்களைத் திறம்படப் பயன்படுத்த உதவுகிறது. அதேநேரம் கொழுப்பு உடலில் சேர்ந்து கொள்ளாமலும் இது பார்த்துக் கொள்கிறது.
இது தொடர்பாக உணவியல் வல்லுநர்கள் கூறுகையில், "இரவு உணவை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் எடுத்துக் கொள்வதே சிறந்த நேரம்.. ஏனெனில் இது உடலின் சர்க்காடியன் சைக்கிளுடன் ஒத்துப்போகிறது.. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.. நல்ல தூக்கத்தையும் நமக்குத் தருகிறது. மேலும், தேவையில்லாமல் அதிகமாகச் சாப்பிடுவதையும் இது தடுக்கிறது.
எப்படி உதவும்: இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவது உங்கள் ரத்த சர்க்கரையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் டைப் 2 நீரிழிவு பாதிப்பு மற்றும் இதய நோய்களை உருவாகும் ஆபத்தைக் குறைக்கிறது" என்கிறார்கள். இரவு உணவைத் துல்லியமாக எப்போது சாப்பிட வேண்டும் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அவர்களது வாழ்க்கை முறை, கலாச்சாரம், வேலை என அனைத்தைப் பொறுத்துமாறுபடும்.
அதிகபட்சம் எப்போது சாப்பிடலாம்: சிலருக்கு மாலை 6-7 மணிக்கு இரவு உணவைச் சாப்பிடுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும். இன்னும் சிலருக்கு 8- 9 மணிக்குள் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். எனவே, இது ஒருவரது வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறும். அதேநேரம் இதில் முக்கியமானது என்னவென்றால் நாம் எல்லா நாட்களும் ஒரே நேரம் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் சாப்பிடக்கூடாது. மேலும், செரிமானத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிப்பது முக்கியம். அதன் பின்னரே தூங்கச் செல்ல வேண்டும்.
அதிகபட்சமாக உங்கள் டின்னரை இரவு 9 மணிக்கு முன் சாப்பிடுவது நல்லது. அதற்கு மேல் தாமதமானால் அது உடலின் சர்க்காடியன் சுழற்சியைச் சீர்குலைத்து, வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. மேலும், உடலில் அதிக கொழுப்பு சேரவும் இது காரணமாக அமைகிறது. இன்னும் சிலர் இரவு உணவையே பேசாமல் சாப்பிடாமல் தவிர்க்கலாமா எனக் கேட்பார்கள். ஆனால், இதுவும் தவறு. இரவு உணவு ரொம்ப முக்கியம்.. அதைத் தவிர்த்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications