பூண்டிலும் கலப்படம் நடக்குதுடோய் பச்சையா சாப்பிட்டு பாருங்க! சப்புனு இருந்தா அவாய்டு பண்ணுங்க!
சென்னை: சைனா பூண்டுக்கும் பெரிய பூண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
பூண்டு நம் வீடுகளில் உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாகும். இது உடல் எடையை குறைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் பூண்டை சாப்பிடுவதால் பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும்.

அந்த பூண்டில் அல்லில் சல்பைடு என்ற வேதிப்பொருள் புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்படுகிறது. வாயுத் தொல்லையை போக்கும். செரிமான சக்தியை அபிவிருத்தி செய்யும். ரத்தக் கொதிப்பை தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
உடல் பருமனை குறைக்கும். பச்சையாக பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்று பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு. மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. இந்த பூண்டை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் பூண்டிலும் பித்தலாட்டம் நடைபெறுவதாக சொல்கிறார்கள். சைனா பூண்டை நாட்டு பூண்டு என கூறி ஏமாற்றுகிறார்கள். இது குறித்து Film Food Fun & Fact எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதை வாங்காதீர்கள்...

இப்ப எல்லாம் மார்க்கெட்ல சைனா பூண்டு, மலபூண்டு என்று இந்த பூண்டை விற்கிறார்கள் நாமளும் உரிக்க ஈசியாக இருக்குன்னு இதை கிலோ 300 ரூபாய் கொடுத்து வாங்குவோம் ஆனால் இந்த பூண்டில் எந்தவிதமான ருசியும் கிடையாது. சின்னதா, உரிக்க கஷ்டமா இருந்தாலும் நாட்டு பூண்டு கிலோ 240 ரூபாய் தான் அதை வாங்குங்கள். இரண்டு பூண்டையும் ஒரு பல்லு எடுத்து பச்சையாக சாப்பிட்டு பாருங்கள் சைனா பூண்டு சப்பென்று இருக்கும் ஆனால் நாட்டுபூண்டு காரம் அதிகமாக நாக்கில் உரைக்கும் சமையலும் வாசமாக மற்றும் டேஸ்டாகவும் இருக்கும்.
மலபூண்டு என சற்று தோல் மண்ணில் புரட்டி எடுத்தது போல் இருக்கும். அது பூண்டி பூண்டு என்பார்கள். புகை போட்டு காய வைத்து தருவார்கள். கொடைக்கானல் மற்றும் பூம்பாறை ஏரியாவில் கிடைக்கும். பூண்டு அளவு மிக சிறியதாக இருக்கும் பல்லும் சிறியதாக இருக்கும். நாட்டுப்பூண்டை விட காரம் அதிகம். மோந்து பார்த்தால் புகை நாற்றம் அடிக்க வேண்டும் இப்படி செக் பண்ணி வாங்குங்கள். 550 ரூபாய் இல்லை. அங்கேயே அதன் விலை 300 ரூபாய் தான். ஆனால் இங்கு சாயம் போட்டு ஏமாற்றுகிறார்கள் ஜாக்கிரதை.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications