மாரடைப்பு வேறு! இதய செயலிழப்பு வேறு! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? டாக்டர் விளக்கம்
சென்னை: தெலுங்கானாவில் குளித்துவிட்டு வந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததை மாரடைப்பு என சொல்லக் கூடாது என்கிறார்கள். அதாவது அந்த மாணவிக்கு ஏற்பட்டது கார்டியாக் அரெஸ்ட், எனவே இதயம் செயலிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
தெலுங்கானாவில் பள்ளிக்குச் செல்ல குளித்துவிட்டு வந்த பிளஸ் 2 மாணவி கஸ்தூரி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறு வயதில் மாரடைப்பு என்ற சம்பவத்தால் பல்வேறு தரப்பினர் அச்சமடைந்துள்ள நிலையில் அது குறித்து Sen Balan என்ற பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது : தமிழ் ஊடக நண்பர்கள் மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு ஏற்படுவதை ஆங்கிலத்தில் heart attack - myocardial infarction என்றும் தமிழில் மாரடைப்பு என்றும் அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
அதேநேரம் பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடுகளால் எப்படி மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றதோ, அதேபோல இதயமும் பாதிக்கப்படலாம். அந்த பாதிப்பு அதிகமாக இருந்தால் சில நேரங்களில் சிறுவயதில் உடனடி இறப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. Hypertrophic cardiomyopathy எனப்படும் இதய தசை வீக்க நோய், Long QT syndrome, Wolff-Parkinson-White syndrome போன்ற இதயதுடிப்பு கடத்துதல் நோய்கள், இதய வால்வு பிரச்சனைகள், Arrhythmia எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பல நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவற்றை மாரடைப்பு (Heart attack) என அழைக்கக் கூடாது, இதயச் செயலிழப்பு (cardiac arrest) என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
இந்தச் செய்தியின் ஆங்கிலத்தில் வந்த பதிப்புகளில் cardiac arrest என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் அதை இதயச் செயலிழப்பு என குறிப்பிடும் போது பொதுமக்களிடம் ஏற்படும் தேவையற்ற பயத்தையும், குழப்பத்தையும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக விளையாடச் சென்றவர்கள், ஜிம்முக்கு சென்றவர்கள், உள்ளிட்டோர் உயிரிழப்புகளை பலர் மாரடைப்பு என தவறாக குறிப்பிடுவதால் பெற்றோர் , பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications