ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏன் ஏற்படுகிறது?...அதற்கு முக்கிய காரணங்களும், அறிகுறிகள் என்ன என்ன?
சென்னை: கடவுளின் படைப்புகளிலேயே மிக அற்புதமான படைப்பு, உலகத்தில் விலைமதிப்பற்ற புதிய உயிர் கொண்டுவரக்கூடிய ஆற்றல் ஆண்களின் வீரத்திற்கும், இனப்பெருக்கத்திற்கு முக்கிய பெருமை சேர்ப்பது இந்த விந்துணு ஆகும். ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டெரோன் மற்றும் போலிக் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் இரண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய மிக மிக இன்றியமையாததாகும். விந்தணுக்கள் உற்பத்திற்கு தேவையான மற்றும் முக்கியமான ஹார்மோன்கள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் (Hypothalamus), பிட்யூட்டரி (Pituitary gland) சுரப்பி ஆரோக்கியமான முறையில் செயல்படுவது மிக மிக அவசியமாகும். அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மிக குறைவாக இருக்கும். இதனால் ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count) இருக்கும். விந்தணுக்களின் தரம் மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியில் உயிர் அணுக்கள் இல்லாத விந்து திரவம் காணப்படும். அதில் ஆரோக்கியமற்ற உயிர் அணுக்கள், அவைகளின் அளவு, நீந்தும் வேகம், அணுக்களின் செயல்பாடுகள் எல்லாமே அசாதாரணமாக இருப்பதால், குழந்தை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணங்கள் மற்றும் என்ன என்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்

பொதுவான அறிகுறிகள் : ஒவ்வொரு ஆண்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியம், மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், ஹார்மோன் சமநிலையின்மை (Harmone imbalance), பரம்பரை குரோமோசோம் (Chromosome) மரபணு மாற்றங்கள், வேளை பளு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பல காரணங்களை பொறுத்தே, ஆரோக்கியமான விந்தணுக்கள், அல்லது குறைந்த விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய அறிகுறியாக இருக்கிறது. சிலருக்கு தேவையில்லாத மது அருந்தும் பழக்கம், புகை பிடித்தல், அதிக உடல் பருமன் காரணம், போன்ற பிற காரணத்தினாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.

குறைந்த விந்தணுக்கள் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்: பொதுவாக மிக குறைந்த விந்தணுக்கள் உள்ள ஆண்களுக்கு, சில முக்கிய அறிகுறிகளை வைத்து பிரச்சனைகளை கண்டறியலாம். முதல் அறிகுறியாக குழந்தையின்மை, விதைப்பை மிக சிறியதாக இருப்பது, விதைப்பைகளில் சிறு கட்டி அல்லது வீக்கம் இருப்பது, உடல் மற்றும் மன ரீதியாக விருப்பமின்மை, உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பது, உடலுறவின்போது வலி ஏற்படுவது, முகத்தில், மற்றும் மார்பு பகுதிகளில் முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகிய அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். உயிரில்லாத விந்தணுக்களை தான் (Azoospermia) என்று கூறப்படுகிறது, ஆதாவது பூஜ்ஜியம் (Zero count) விந்தணுக்களின் எண்ணிக்கை. இந்த குறைபாடு லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் இருப்பதாக சில ஆய்வில் கூறப்படுகிறது.குறைந்த எண்ணிக்கை அல்லது ஹார்மோன் சமநிலையின்மை (Harmone imbalance) ஆகிய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டு, சரியான முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications