ஆமா.. ஆண்களுக்கு "முன் வழுக்கை" விழ காரணம் என்ன? அதை எளிய முறையில் சரி செய்ய என்ன செய்யலாம்?
சென்னை: அறிவியல் ரிதியாக நம் எல்லோருக்கும் தலையில் முடி வளர்வது என்பது, ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் நடைபெறும். தலைமுடி வளரும் கால நாட்கள் சுமார் 6 மாதத்திலிருந்து 2 வருடம் வரை நன்கு வளரும். நன்கு வளர்ந்த பிறகு, 3 மாதம் வரை தலைமுடி உதிரும், இரண்டு மாதத்தில் மறுபடியும் வளர தொடங்கும்.
இப்படி முடி வளர்வதும், உதிர்வதுமாக, 40-65 % வரை சுழற்சி முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும். ஒவ்வொருவருக்கும் சுமார் 1-2 லட்சம் வரை தலை முடி இருக்கும், தினமும் 5- 20 முடி வரை உத்திர வாய்ப்புண்டு. இயற்கையாகவே 35 வயதிற்குமேல், கொஞ்சம் கொஞ்சமாக முடி வளரும் சதவிகிதம் குறைந்துவிடும்.
40 வயதிற்கு மேல், முடி வளர்ச்சி குறைந்து, 60-75% முடி கழித்தல் அதிகமாகி, முன் வழுக்கை காணப்படும். இது ஒவ்வொருவருக்கும் தலை முடி உதிர்வு வேறுபடுவதால், முன் வழுக்கை, நடு வழுக்கை, பின் வழுக்கை என்று மூன்று வகையாக காணப்படுகிறது.
தலை முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு, பரம்பரை வழி வருவது, மரபியல் (genetic), வாழ்க்கை முறை கோளாறு (Life style disorder), பொடுகு தொல்லை, உடல் உஷ்ணம், அதிக உஷ்ணத்தால் தலையில் (dead skins) இறந்த தோல்கள் காணப்படுவது, பித்தம் தலைக்கு ஏறுவது, வைட்டமின் குறைபாடு, போன்ற பிற காரணங்களும் உண்டு. உடல் உஷ்ணத்தை தணிக்க தினமும் தலை நினைத்து குளிக்க வேண்டும். குளிப்பது என்பது, உடலை குளிர்விப்பது ஆகும். ஆண்களும் பெண்களும் என எல்லோருமே தினமும் தலை குளிப்பது மிக மிக அவசியமாகும். அடிப்படயாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தலை முடி உதிர்வுக்கு முக்கிய காரணத்தை கண்டறிந்து, அதை தடுப்பதற்கு தீர்வை தேடிக்கொள்வது, சால சிறந்தது.

தலை முடி உதிர்வதற்கு பிற காரணங்கள்: ஆண்களுக்கு முன் வழுக்கை வருவதற்கு மற்றொரு காரணம் உணவு முறை, முக்கியமாக கோழி இறைச்சி உணவுகள் (chicken food). இன்றைய காலகட்டத்தில் இந்த உணவுகளை உட்கொள்வதை குறைத்து கொள்ளவது நல்லது. தினமும் மலம் சரியாக கழிக்கவில்லை என்றாலும், உடல் உஷ்ணம் ஆகி, பொடுகு மற்றும் முடி உதிர்வை அதிகமாக ஏற்படுத்தும். ஷாம்பூவை நேரடியாக போட்டு தலை குளித்தால் முடி கொட்டும், மாறாக ஷாம்பூவுடன் சிறிது தண்ணீர் கலந்து அலசவேண்டும். தலை குளித்து ஈரமுடியுடன் தலை வாரினால் முடி வலுவிழந்தது அதிக முடி உதிரும், அடிக்கடி ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரைட்னிங் கருவி பயன்படுத்தினால் முடியின் வேர் வலுவிழக்கும், சுடுதண்ணீரில் தலை குளித்தால் முடியின் வேர் பாதிப்படைந்து முடி கொட்டும். போதுமான தூக்கம் இல்லாமை, உடல் சூடு அடைவதோடு, முடி உதிர்தலையும் ஏற்படுத்துகிறது, அடிக்கடி துரித உணவு சாப்பிட்டால் முடி கொட்டும்.
தவறான உணவு பழக்கங்கள்: இன்று பெரும்பாலானோர் அமில உணவுகள் (Acidic food) வகைகள் உட்கொள்வது, காலை உணவை தவிர்ப்பது, வெயிலிருந்து கிடைக்கக்கூடிய, சருமத்திற்கு தேவையான வைட்டமின் டி குறைபாடு, மேலும் இளவயது நரைக்கு முக்கிய காரணம், கல்லீரலில் இருந்து சுரக்கக்கூடிய மெலனின் நிறமி (Melanin Pigment) குறைபாடு, மேலும் அதிக பித்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய உணவு வகைகளை உட்கொள்வது, போன்ற பல காரணங்களும் உள்ளது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே உடல் உஷ்ணம் இருப்பதால், பித்தத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி உதிர்வை தடுக்க, இயற்கை உணவு (Hair Food): முடி உதிர்வை தடுக்கவும், நல்ல அடர்த்தியாக வளரவும் இயற்கையாக கிடைக்கூடிய உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். சோயாபீன்ஸ் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் முடி உதிர்வை தடுக்க முடியும் என சில ஆய்வகூறப்பட்டுள்ளது. சோயாபீன்ஸ் உள்ள பி2 வைட்டமின் முடி வளரவும், கருமையாக இருக்க உதவுகிறது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவில் சேர்த்துவர தலைமுடி உதிர்வையும், வழுக்கை வராமல் தடுக்கிறது. இதை தவிர வேகவைத்த முட்டை, வெள்ளரி விதை, பூசணி விதை, ஆளி விதை,போன்ற விதைகளை பயன்படுத்தலாம். இதில் ஏதேனும் ஒரு வகை விதையை சிறிதளவு ஊறவைத்து, மைய அரைத்து, பாலில் கலந்து குடிக்கலாம். வெந்தய கீரை, பசலை கீரை, மற்றும் பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். சிறு தானிய வகைகள், மற்றும் சக்கரைவள்ளி கிழங்கு ஆகிய பல்வேறு உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், முடி உதிர்வை தடுத்து, நல்ல முறையில் கேசத்தை பராமரிக்கலாம்.












Click it and Unblock the Notifications