"வயிற்றுக்குள் வைப்ரேஷன்.." சல்லுனு தொப்பை குறையுமாம்.. மூளையை ஏமாற்றும் நவீன மாத்திரை! அது எப்படி
சென்னை: உடல் எடை குறைப்பு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதற்கு புதிய சிகிச்சை முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் பருமன் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்று உலகெங்கும் இந்த உடல் பருமன் தான் பெரிய பிரச்சினை. இதனால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இதற்கிடையே மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் பொறியாளர்கள் உடல் பருமனைக் குறைக்கப் புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். அதுதான் வைபிரேட் ஆகக் கூடிய சின்ன மாத்திரை வடிவிலான காப்ஸ்யூல்.
காப்ஸ்யூல்: இந்த காப்ஸ்யூலை நாம் சாப்பிடும் போது வயிறு நிரம்பியது போன்ற சமிக்ஞைகளை நமது மூளைக்கு அனுப்பிவிடும். இதன் காரணமாக நமக்கு வயிறு நிறைந்து இருக்கும் போது ஏற்படும் திருப்தி ஏற்படும். உடல் பருமன் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி உலக நாடுகளை அலறவிட்டு வரும் நிலையில், அதற்கு ஒரு நல்ல தீர்வை இது கொடுக்கும். இதன் மூலம் அளவுக்கு அதிகமா சாப்பிடுவதை நாம் தடுக்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனிவாசன் தனது டீம் உடன் இணைந்து இந்த காப்ஸ்யூலை உருவாக்கியுள்ளார். பொதுவாக நாம் உணவைச் சாப்பிடும் போது நமது வயிறு சற்று பெரிதாகும். அப்போது வயிறு நிறைந்துவிட்டதைக் குறிக்கும் ஹார்மோன்களை வெளியிட மூளைக்குச் சமிக்ஞை செய்யும் மெக்கானோரெசெப்டர்களை செயல்படத் தொடங்குகிறது.
வைபிரேட் ஆகும் வயிறு: இந்த உணர்வை நாம் சாப்பிடாமலேயே இந்த காப்ஸ்யூல் நமக்குத் தருகிறது. இந்த ஏற்பிகளை செயற்கையாகத் தூண்ட வயிற்றுக்குள் இந்த காப்ஸ்யூல் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. முதற்கட்டமாக விலங்குகளிடம் இதை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன் இந்த காப்ஸ்யூல் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த விலங்குகள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவைக் காட்டிலும் 40% வரை குறைவாகவே உணவை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த காப்ஸ்யூல் உடல் பருமனைக் குறைத்துள்ளது.
என்ன நடக்கும்: இந்த காப்ஸ்யூல் ஒரு சிறிய சில்வர் ஆக்சைடு பேட்டரியில் இயங்குகிறது. இது வயிற்றை அடைந்தவுடன் சுமார் 30 நிமிடங்களுக்கு அதிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வயிற்றில் இருக்கும் அமிலம் காப்ஸ்யூலின் ஜெலட்டினஸ் வெளிப்புற அடுக்கைக் கரைக்கும் நிலையில் சர்க்யூட் முழுமையடைகிறது.
தொடர்ந்து மோட்டர் தூண்டப்படும் நிலையில், அதில் ஏற்படும் அதிர்வுகள் மெக்கானோரெசெப்டர்களை தூண்டி மூளைக்குச் சமிக்ஞைகளை அனுப்புகிறது. இதன் மூலம் வயிறு நிறைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
எதற்கு உதவும்: உடல் பருமன் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதற்கு சிகிச்சையளிக்க இந்த முறை உதவும். இப்போது உடல் பருமனைக் குறைக்க ஆப்ரேஷன் உள்ளிட்டவை தேவைப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பம் உடல் எடை குறைப்பு சிகிச்சையை எளிதான ஒன்றான மாற்றுகிறது. இது உடல் எடை குறைப்பு சிகிச்சையில் மிக மிகப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
எடை சல்லுனு குறையும்.. "இந்த 5 மேட்டரை மட்டும் செய்தால் போதும்.." ரொம்பவே ஈஸி.. கவலை வேண்டாம்
40% வரை குறைவாக உணவை உட்கொள்ளும் போது உடல் எடை தானாகக் குறைகிறது. இது உடல் எடை குறைப்புக்கு மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. வரும் காலத்தில் எளிமையாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள எதுவாக காப்ஸ்யூல்களின் உற்பத்தி செயல்முறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் இப்போது ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
அடுத்தகட்டம்: அடுத்தகட்ட ஆய்வில் இந்த காப்ஸ்யூல் மனிதர்களுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்.. உணவைச் சாப்பிட எத்தனை நேரத்திற்கு முன்பு இதை எடுத்துக் கொண்டால் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications