மனித மூளை 300 கிராம் சரி! கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா?
சென்னை: மனிதனின் கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா? மூளையின் எடை தெரியும். ஆனால் கண்களின் எடை 99 சதவீதம் பேருக்கு தெரியவே தெரியாது.
யாராவது ஒரு செயலை சூப்பராக செய்து விட்டால் உனக்கு மூளை ஜாஸ்தி என்போம். ஆனால் அது நிஜமல்ல! எல்லாருக்கே மூளை 300 கிராம்தான். ஆனால் அதை பயன்படுத்தும் விதத்தில்தான் மாறுபாடுகள் உள்ளன. அந்த வகையில் மனிதனின் கண்களின் எடை என்ன என்பது பார்ப்பதற்கு பொது அறிவு கேள்வி போல் இருக்கும்.

ஆனால் அப்படி அல்ல! வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற பல்வேறு விஷயங்களில் நாம் அடிப்படை பொது அறிவை பெற்றுள்ளதை போல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும் நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வேர்க்கடலை: அதில் முக்கியமான கேள்வி! தினமும் வேர்க்கடலையை சாப்பிட்டால் வளர்ச்சியை துரிதப்படுத்துமா என்பதுதான். இதற்கு பதில் பார்த்தால் தினமும் வேர்க்கடலையை மென்று சாப்பிடுவது நினைவாற்றலை வேகமாக அதிகரிக்கும். வேர்க்கடலையில் மெக்னீசியம், ஃபோலேட், தாமிரம் உள்ளிட்டவை உள்ளன.
அதிக ஊட்டச்சத்து இருப்பதன் காரணமாக டயட்டில் வேர்க்கடலையை தவறாமல் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெற ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை எடுத்துக் கொண்டாலே போதும்.
பார்வைத் திறன்: அது போல் மனிதர்களின் கண்களின் எடை என்ன என்ற கேள்விக்கு 8 கிராம் என்ற விடை உள்ளது. ஒவ்வொரு நபரும் பார்வையில் குறைபாடு இல்லாத நிலையில் 25 செ.மீ. தூரம் வரை தெளிவாக பார்க்கலாம். அதற்கு மேல் பார்த்தால் அது மங்கலாக தெரியும்.
கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலையில் பொடுகுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களில் தூசி விழுந்தால் அடிக்கடி கசக்கக் கூடாது! கண்களில் சுத்தமான நல்லெண்ணெய் விடலாம். கண்களில் பிரச்சினை என்றால் நாமாக மருந்துகளை விடக் கூடாது! கண்களுக்கு நீண்ட நேரம் வேலை கொடுக்கக் கூடாது!
டிவி பார்க்க கூடாது: நீண்ட நேரம் இரவில் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது! டிவியோ செல்போனோ பார்த்த படியே இருத்தல் கூடாது! கண்களுக்கு தேவையான கண் பயிற்சிகளை அவ்வப்போது செய்துக் கொள்ள வேண்டும். கண்களை நன்கு மூடிக் கொண்டு ரிலாக்ஸாக தூங்கினால்தான் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
விட்டமின்கள் என்ன: நல்ல கண் பார்வைக்கு கேரட், மீன், கீரை உள்ளிட்டவைகளை சாப்பிடுதல் வேண்டும். அது போல் பாதாம், சூரியகாந்தி விதைகள், விட்டமின் ஈ கொண்ட உணவுகளை சாப்பிடலாம். அது போல் பப்பாளி பழம், ஆரஞ்சு, முட்டை, தக்காளி, பச்சை நிற காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, வால்நட் உள்ளிட்டவைகளை சாப்பிடலாம். இவற்றை தினம் ஒன்று என சாப்பிட்டு வரலாம். கண்கள் நன்றாக இருக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நிறைய கீரைகளை உண்ண வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும்.
எந்த காய்கறியில் அதிக இரும்பு சத்து இருக்கிறது என்பது தெரியுமா? வெந்தயக் கீரையில்தான்! அது போல் ராஜ்மா கொட்டையிலும் இரும்புச் சத்து இருக்கிறது. கீரை, பச்சைக் காய்கறிகளில் நிறைய கால்சியம், வைட்டமின்கள், இரும்பு சத்துகள் உள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications