டின்னர் டைம் ஆகிடுச்சு.. இரவு என்ன சாப்பிடலாம்? தொப்பை இருந்தால் மேஜிக் மாதிரி காணாம போகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் உடல் எடை குறைப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உடல் எடை குறைப்பில் நாம் டின்னருக்கு என்ன சாப்பிடுகிறோம்.. எத்தனை மணிக்குச் சாப்பிடுகிறோம் என்பது ரொம்பவே முக்கியம். டின்னருக்கு என்ன சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் போது நிச்சயம் உங்களுக்குக் களைப்பாகவே இருக்கும். எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டால்.. அடுத்து நமக்கு எழும் மிகப் பெரிய கேள்வி டின்னருக்கு என்ன சாப்பிடலாம் என்பது தான்.

health doctor

இரவு டின்னர்: ஜொமெட்டோ மற்றும் ஸ்விக்கி பக்கம் நீங்கள் போனால் அங்கும் மணிக் கணக்கில் ஸ்க்ரோல் தான் செய்து கொண்டு இருப்பீர்கள். பல நேரங்களில் மாலையில் உணவு ஆர்டர் செய்ய மொபைலை எடுத்தால் இரவு வரை கூட சரியான உணவைச் சரியான விலையில் ஆர்டர் போட முடியாது. அந்தளவுக்குக் குழப்பிவிடும்.

இந்த குழப்பத்தைச் சற்று சமாளிக்க வல்லுநர்கள் சில ஆப்ஷன்களை வழங்குகிறார்கள். அதாவது காலையில் பிரேக் ஃபாஸ்டிற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை டின்னருக்கும் சாப்பிடலாமாம். இது பல வழிகளில் உடலுக்கு நன்மையைத் தரும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொடாதீர்கள்: சத்தான, புரதம் நிறைந்த, ஆரோக்கியமான காலை உணவையே நீங்கள் டின்னருக்கு சாப்பிடலாம். அதேநேரம் ஹெவியான உணவுகளான பரோட்டா மற்றும் பூரிகளை இரவு தொடவே தொடாதீர்கள். காலை சாப்பிடும் போது கூட இதுபோன்ற உணவுகளை எப்போதாவது ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்வானா சையத், "வழக்கமாக நாம் இரவு டின்னரை ஹெவியாக சாப்பிடுவோம். ஆனால், அது உடலுக்கு நல்லது இல்லை. அதற்குப் பதிலாக லேசான காலை உணவைச் சாப்பிடலாம்.. அது உடலுக்குப் பல வழிகளில் நன்மை தரும். அதைச் செய்வதும் ரொம்பவே ஈஸி. கலோரிகளில் குறைவாக இருப்பதால் உடலுக்கும் நல்லது" என்றார்.

என்ன சாப்பிடலாம்: போஹா, உப்மா, தாலியா, ஆம்லெட்டு மற்றும் பனீர் மற்றும் தால் சீலா, இட்லி போன்ற உணவுகளை நாம் சாப்பிடலாம். இவற்றை காய்கறி அல்லது சட்னியுடன் சாப்பிடும் போது உடலுக்குப் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களில் அதிக அளவில் கிடைக்கும். இவை காலை உணவுக்கு மட்டுமின்றி இரவு உணவுக்கும் கூட ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இரவு சமைக்க அதிக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் இதைச் சாப்பிடலாம். தொடர்ந்து அதிக நாட்கள் இதை நாம் சாப்பிட்டு வந்தால் இது நமக்குப் பெரியளவில் உதவுமாம். பொதுவாக, வல்லுநர்கள் லேசான இரவு உணவையும் ஹெவியான காலை உணவையும் சாப்பிடச் சொல்கிறார்கள். எனவே, காலை உணவை இரவு சாப்பிடத் திட்டமிட்டால் குறைந்த அளவு சாப்பிடுங்கள். மேலும், அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிருங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளையும் உண்ணக் கூடாது.

பெஸ்ட்: முட்டை, காய்கறிகளைச் சாப்பிடலாம். மேலும், போஹா, உப்மா, தோசை மற்றும் இட்லி போன்ற இலகுவான உணவுகளும் இரவு உணவிற்கு ஏற்றது நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த உணவை எப்போதும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு வாருங்கள்.

அதுவும் லேட் நைட்டில் சாப்பிடக்கூடாது. முடிந்த வரை இரவு 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டுக் குறைந்தது 2 மணி நேரம் கழித்து மட்டுமே தூங்க வேண்டும். இந்த டயர்ட்டை பாலோ செய்தால் தொப்பை குறைப்பதெல்லாம் ரொம்பவே ஈஸியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+