கல்லீரல் நன்றாக இயங்க என்ன சாப்பிட வேண்டும்? மது அருந்துபவர்களுக்கு அதிர்ச்சி தரும் உண்மை
சென்னை: கல்லீரல் நன்றாக இயங்க என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்படையும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்காக இந்த கட்டுரை.
நமது உடலின் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பணியை கல்லீரல் தான் செய்கிறது. எனவே ஆரோக்கியமான கல்லீரல் அத்தியாவசியமான ஒன்றாகும்.

பொதுவாக கல்லீரல் பிரச்னை என்பது 70 சதவீதம் கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னரே வெளியே தெரியவருகிறது. கல்லீரல் என்பது மற்ற உறுப்புகளை போல் அல்லாமல் தன்னைத்தானே மீட்டமைத்து சரி செய்து கொள்ளும் தன்மை உடையது. ஆனால் தொடர்ந்து மதுஅருந்தி அதன் செயல்பாட்டை காலி செய்வதால் ஒருகட்டத்தில் மோசமடைந்து அதனால் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.
அதேபோல் கல்லீரல் பிரச்சனைக்கு மது மட்டுமின்றி நம்முடைய பாஸ்புட் உணவு பழக்கமும் மோசமான காரணமாக இருக்கிறது. ஏனெனில் நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் நமது கல்லீரலைத்தான் சென்றடைகிறது. நாம் நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கல்லீரை பாதுகாக்கும் உணவகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் விஷ்ணு கிரந்தி போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறதாம். இவை அனைத்துமே மது இல்லாமல் வரும் கல்லீரல் நோயில் (Non-alcoholic fatty liver disease) இருந்து நம்மை காக்கும். எனவே மதுவால் வரும் கல்லீரல் நோயை தடுக்க வேண்டும் என்றால், மதுவை இன்றோடு நிறுத்துவதுதான் சிறப்பானதாக இருக்கும்.
கல்லீரலை பாதுகாக்க பல்வேறு உணவுகள் இருக்கின்றன என்றாலும், தற்போதைய நிலையில் கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த குறிப்புகள் எல்லாம் பொதுவாக கல்லீரலை பாதுகாக்க உதவும் உணவுகளாகும். வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்க உதவுகிறது. இந்த. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு உதவுகிறது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையானது இந்த என்ஸைம்கள்தான்.
இஞ்சியும் கல்லீரல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள்.

வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே நெல்லிக்காய் தொர்ந்து எடுத்துக் கொண்டால் கல்லீரலின் சுமையை குறைக்கலாம்.
கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன.
முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், திராட்சைப்பழம் , விஷ்ணு கிரந்தி, மஞ்சள் போன்றவையும் கல்லீரலை பாதுகாக்கும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறிப்பாக மஞ்சளில் உள்ளகுர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications