கர்ப்பம் உறுதி செய்ய எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை செய்தால் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் தெரியுமா?
சென்னை: நீங்கள் கர்ப்பமாக இருப்பது எத்தனை நாட்களில் பரிசோதனை செய்தால் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் தெரியுமா?
செல்வத்துக்குள் சிறந்த செல்வம் எத்தனை இருந்தாலும் அவற்றில் ஒன்று குழந்தை செல்வம். திருமணமான அடுத்த 3 மாதங்களில் அனைவரும் கேட்கும் கேள்வி என்ன விசேஷம் ஏதேனும் இருக்கா என்பதுதான். திருமணமாகி 6 மாதங்கள் வரை கூட சிலர் பெரியவர்கள் பொறுமையாக இருப்பதில்லை.
உடனே குழந்தையை கேட்டு நச்சரிப்பது, மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துவது என இருக்கிறார்கள். ஓராண்டு, ஈராண்டுகளுக்கு மேல் ஆனால் போதும் பையனுக்கு மறுமணம் செய்வது குறித்து யோசிக்கிறார்கள்.

hormone imbalance பிரச்சினையால் கூட ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தள்ளி போகலாம். இதை வைத்து பெரியவர்கள், கர்ப்பமாக இருக்கிறார்கள் என கணக்கு போடக் கூடாது. எனவே உடலுறவுக்கு பிறகு மாதவிடாய் தள்ளி போனாலே கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும். அது முற்றிலும் தவறு. எப்போதுமே பரிசோதனையின் முடிவில்தான் இதை உறுதிப்படுத்த முடியும்.
கர்ப்பமாக இருப்பதை கண்டறிய சில ஸ்ட்ரிப்புகள் வந்துவிட்டன. அவற்றின் மூலம் கண்டறியலாம். இந்த கருவியில் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகிக்கும் பெண்கள் ஒரு சொட்டு சிறுநீரை விட வேண்டும். அதில் பிங்க் நிறத்தில் ஒரு கோடு வந்தால் கர்ப்பம் இல்லை. இரு கோடுகள் வந்தால் கர்ப்பம் என்பது அர்த்தம். அது ஏன் இரு கோடுகள் வருகிறது தெரியுமா?
கருவுற்ற பெண்களாக இருந்தால் அவர்களுக்கு சிறுநீருடன் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) எனும் ஹார்மோன் வெளியேறும். கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே அல்லது உங்கள் கருப்பை புறணியுடன் இணைந்தால் இந்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது. ஃபலோபியன் டியூபில் விந்தணுக்களால் முட்டைகள் கருத்தரித்த 6 முதல் 7 நாட்களுக்கு பிறகு இந்த செயல்முறை நடக்கிறது.
சிறுநீர் மூலம் கர்ப்பத்தை சோதனை செய்வதை விட ரத்த பரிசோதனை செய்தால் அதில் துல்லியமாக காட்டிவிடும். எத்தனை வார கரு என்பது முதல் துல்லியமாக தெரியும். மாதவிடாய் தள்ளி போன ஒரு நாளிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கண்டுபிடித்து விடலாம். இல்லாவிட்டால் மாதவிடாய் தள்ளி போவதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு சோதனை செய்தாலும் தெரிந்துவிடும்.

சில கர்ப்ப பரிசோதனை கருவிகள், கர்ப்பத்தின் போது உற்பத்தியாகும் எச்சிஜி ஹார்மோன்களை மாதவிடாய் வருவதற்கு முன்பே கண்டுபிடித்துவிடும். மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு முன்பாகவே இந்த ஹார்மோன் சுரக்க தொடங்கிவிடும். உங்கள் மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கர்ப்ப பரிசோதனையை 35 முதல் 40 நாட்களில் எடுக்கலாம்.
நீங்கள் உங்கள் பீரியட்ஸ் காலம் தள்ளிப்போகும் போதோ அல்லது கருவுற்றதற்கான சில அறிகுறிகளை கொண்டிருக்கும் போதோ கட்டாயம் இந்த சோதனையை செய்வது அவசியம். வீட்டில் சோதனை செய்து அது உறுதியாகிவிட்டால் மருத்துவரிடம் சென்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளையும் அறிவுரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் குழந்தையின் ஹார்ட் பீட் சோதனை செய்வார்கள். அது போல் குழந்தை சில நேரங்களில் ஃபலோபியன் டியூப்களில் வளரும். எனவே குழந்தை கருப்பையில் வளர்கிறதா என சோதனை செய்து பார்ப்பார்கள். இவை எல்லாம் கருவுற்ற சில வாரங்களில் செய்வார்கள். அதன் பின்னர்தான் நிம்மதியாக கருவுற்ற காலத்தை எண்ணி மகிழ முடியும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications