நட்ஸ் நல்லது தான்.. ஆனா "இந்த" பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை தொடவே கூடாது.. நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: நமது உடலுக்கு நட்ஸ் ஏகப்பட்ட நன்மைகளைக் கொடுக்கும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் தினசரி நட்ஸ் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். நட்ஸ் மூலம் நமக்கு என்ன தான் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் கூட சில குறிப்பிட்ட மக்கள் நட்ஸை தொடவே கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.. யார் அவர்கள்! ஏன் அந்த குறிப்பிட்ட பிரிவினர் நட்ஸ் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் எங்குப் பார்த்தாலும் நட்ஸ் சாப்பிடச் சொல்லியே பலரும் அறிவுறுத்துவார்கள். நட்ஸில் புரதமும் பைபரும் இருப்பதால் அது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும்.

நட்ஸில் இதுபோல ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் கூட சில குறிப்பிட்ட க்ரூப் மக்கள் அதைச் சாப்பிடக்கூடாது என்றே மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.. யார் அந்த மக்கள்.. ஏன் இவர்கள் மட்டும் நட்ஸ் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
செரிமான பிரச்சினை
முதலில் செரிமான பிரச்சினைகள் இருப்போர் நட்ஸ் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நட்ஸ் என்பது கொழுப்பும் நார்ச்சத்தும் அதிகம் இருக்கும் உணவு. எனவே, அது ஜீரணமாக அதிக நேரம் ஆகும். செரிமான பிரச்சினை இருப்போர் நட்ஸ் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு அது எவ்வளவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது. இதனால் வயிற்றில் வாயு மற்றும் குடல் வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
குறிப்பாகப் பாதம் உள்ளிட்ட சில நட்ஸ் செரிமான பிரச்சினை இருப்போருக்குக் குமட்டலையும் கூட ஏற்படுத்தலாம். எனவே, செரிமான பிரச்சினை இருப்போர் நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.
நெஞ்சு எரிச்சல்:
அதேபோல நெஞ்சு எரிச்சல் பிரச்சினை இருப்போரும் நட்ஸ் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நட்ஸ்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இது செரிமானத்தை மெதுவாக்குவது மட்டுமின்றி நெஞ்செரிச்சல் பிரச்சினையை மோசமாக்கும். மேலும், பாதாம் மற்றும் முந்திரி போன்ற சில நட்ஸ் வகைகள் வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டி, நெஞ்செரிச்சலை அதிகரிக்கச் செய்யும்.
LES எனப்படும் உடல் பகுதி உணவு குழாய் மற்றும் வயிற்றைப் பிரிக்கும் ஒரு தசை ஆகும். வேர்க்கடலை உள்ளிட்ட சில நட்ஸ்கள் இந்த பகுதியைத் தளர்த்தலாம். இதனால் வயிற்று அமிலம் உணவு குழாயில் பாய்ந்து நெஞ்செரிச்சலை மோசமாக்கும். எனவே, நெஞ்சு எரிச்சல் பிரச்சினை உள்ளவர்களும் குறிப்பிட்ட வகை நட்ஸ்களை சாப்பிடக்கூடாது.
குழந்தைகள்:
அதேபோல நட்ஸ் நல்லது தான் என்றாலும் குழந்தைகளுக்கு நட்ஸ் தரக்கூடாது. குறிப்பாக 3 வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நட்ஸ் தருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நட்ஸ் சற்று பெரிதாக இருக்கும். அதைக் குழந்தைகள் சாப்பிடும் போது அது குழந்தைகளின் தொண்டையில் சிக்குவதற்கான ஆபத்து இருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு அதைத் தரவே கூடாது.
நட்ஸ் அலர்ஜி
எல்லாவற்றையும் தாண்டி நட்ஸ் அலர்ஜி இருப்போருக்குத் தப்பித் தவறியும் கூட அதைத் தரக்கூடாது. இதுபோல அலர்ஜி இருப்போர் நட்ஸ் சாப்பிடும் போது அவர்களுக்குத் தோல் வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்படலாம். எனவே, நட்ஸ் அலர்ஜி இருப்போர் கண்டிப்பாக அதைச் சாப்பிடவே கூடாது. மேலும், ஒவ்வொருவருக்கும் அந்த அலர்ஜி ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்குப் பாதம் அலர்ஜியாக இருக்கும். சிலருக்கு வேர்க்கடலை அலர்ஜி இருக்கும். எனவே, உங்கள் உடலுக்கு எது செட் ஆகாது என்பதைக் கண்டறிந்து அதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உங்கள் உடலில் எதாவது மருத்துவ பிரச்சினை வந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications