உடல் எடையை குறைக்கணுமா? சர்க்கரை நோயாளியா? ரொட்டியா? அரிசி சாதமா? எது பெஸ்ட்?
சென்னை: உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதற்கு எந்த உணவு சிறந்தது தெரியுமா? கோதுமை ரொட்டியா இல்லை அரிசி உணவா? என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள். பிறகு உங்களில் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே பலருக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கருதுவார்கள். அதிலும் சாப்பாட்டு பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இவர்கள் சர்க்கரை, கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, பால், தயிர், மாவு பொருட்களை சாப்பிடவே கூடாது.

அது போல் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது கட்டுக்குள் இல்லாவிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே சர்க்கரை நோயை உரிய அளவில் வைத்திருக்க வேண்டியது முக்கியமானது. இதற்கு டாக்டர்கள் அறிவுறுத்துவது என்பது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் ஆகும்.
சிலரால் வயிற்றையும் வாயையும் கட்டவே முடியாமல் அவதிப்படுவார்கள். என்ன செய்வது, நன்கு ருசியாக சாப்பிட்ட நாக்கிற்கு "தீனி " போட முடியாமல் போகிறது. அதிலும் டயட் என வரும் போது வெள்ளை நிறங்களை அறவே ஒதுக்கி விட வேண்டும் என்பார்கள். அதாவது சர்க்கரை, அரிசி, மைதா உள்ளிட்டவை எடுக்கவே கூடாது.
அதிலும் உடல் எடையை குறைப்பதற்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொட்டி சிறந்த உணவா இல்லை அரிசி சாதமா என்ற பழம்பெரும் கேள்வி எழத்தான் செய்யும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், அரிசியை ஒப்பிடும் போது கோதுமை ரொட்டியில் ஏராளமான தாதுக்கள் உள்ளன. ஆயினும் இரண்டிலுமே அதிக மாவு சத்துகள் உள்ளன.
ரொட்டியில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. ஆனால் புரதம் என்பதை கிடையாது. ஆயினும் அரிசியை காட்டிலும் ஏதோ கொஞ்ச நஞ்ச புரதம் இதில் இருக்கிறது. இவையெல்லாம் அரிசியில் இல்லை. ஒரு கப் முழுக்க சாதம் சாப்பிட்டாலும் உங்களுக்கு பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் அரிசியில் உள்ள ஸ்டார்ச் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.
அரிசியில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. ஆனால் நார்ச்சத்து இல்லை. இதனால் அரிசி உடனே ஜீரணமாகிறது. எனவே உடல் எடையை குறைப்போருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொட்டி ஆரோக்கியமானது. அரிசியை சாப்பிட்டால் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ரொட்டியில் குறைந்த அளவே மாவுச் சத்து இருப்பதால் அதை சாப்பிட்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கிறது.
சப்பாத்தி எனும் ரொட்டியை சாப்பிட்டால் வயிறு திம்முனு இருக்கும். அது இல்லாமல் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். கோதுமையில் உப்பும் இருக்கிறது. அதாவது 120 கிராம் கோதுமையில் 90 மில்லி கிராம் சோடியம் இருக்கும். இந்த சோடியம்தான் தண்ணீரை தக்க வைத்து ரத்தம் திரவமான நிலையிலேயே உடல் உறுப்புகளுக்கு பரவ வைக்கிறது. ஒரு வேளை ரத்தம் கெட்டியானால் மாரடைப்பு ஏற்படும், உள்ளுறுப்புகள் கெட்டு போகும். ஆனால் அரிசியில் இந்த சோடியம் உப்பு இல்லை.
ரொட்டியில் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. ஆனால் அரிசியல் இதெல்லாம் கிடையாது. எனவே அரிசியை காட்டிலும் ரொட்டிதான் சிறந்தது என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications