கெட்ட கெட்ட கொழுப்பை கரைச்சிடும் பூசணிக்காய்.. ஜஸ்ட் 1 டம்ளர் வெண்பூசணி ஜூஸ்.. சர்னு குறையும் வெயிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பூசணிக்காய் பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.. எப்படி தெரியுமா?

பூசணியில் நிறைய வகைகள் உள்ளன.. குறிப்பாக, வெள்ளை பூசணிக்காயில் சாறு எடுத்து பயன்படுத்தும்போது நிறைய பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.. வெள்ளைப்பூசணி ஜூஸ் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன..

Which Health helps to reduce Bad cholesterol and White Pumpkin Juice is the Amazing Medicinal food for Weight Loss

இருமல்: வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த பூசணிக்கு உண்டு.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இருமல், ஜலதோஷம், காய்ச்சலை விரட்டியடிக்கிறது..


மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்புடைய இந்த வெண்பூசணி பெண்களுக்கு மிகவும் நல்லது.. அதிலும், வெள்ளைப்படுதலை நீக்க, இந்த வெண்பூசணி கைகொடுக்கும்... குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

ஜூஸ்:
இந்த வெண்பூசணி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? வெள்ளை பூசணியில் உள்ள தோல்கள், விதைகளை நீக்கிவிட்டு, அதில் உள்ள சதைகளை மட்டும் சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.. ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கொண்டு, மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.. ஒரு டம்ளர் கிடைக்கும் இந்த ஜூஸை அப்படியே குடித்துவிட வேண்டும்..

வெறும் வயிற்றில் இப்படி குடித்துவந்தால், உடலில் உள்ள ஊளை சதைகள் காணாமல் போகும்.. இதில், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் பயிற்சி செய்துவிட்டு, இந்த பூசணிக்காய் ஜூஸ் குடிக்கும்போது கூடுதல் பலன்களை தருகிறது.. அந்த அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று இந்த வெள்ளை பூசணிக்காய்.

கெட்ட கொழுப்புகள்: பூசணி ஜூஸ் குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைத்துவிடும்.. இதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

அதேபோல பூசணி விதைகளை எடுத்துக்கொண்டால், அளவுக்கு அதிகமான சத்துக்கள் இதில் உள்ளன.. குறிப்பாக, நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் E, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.. அதாவது 100 கிராம் பூசணி விதைகளில், 600 கலோரிகள் உள்ளதாம்.

பூசணி விதைகள்: ஒரு கப் பூசணி விதைகளை சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பான ஆற்றல் கிடைக்கும்.. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்க உதவும்.

நம்முடைய உடம்பில், துத்தநாக தாதுசத்து குறைவாக இருப்பதால்தான், சளி, காய்ச்சல், மனஅழுத்தம், இதெல்லாம் ஏற்படுகிறது. பூசணி விதையில் துத்தநாகம் நிறைய உள்ளதால், செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.. ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் உள்ளதால், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து, சர்க்கரைநோயையும் வராமல் தடுக்கிறது.

வெள்ளைப்படுதல்: இந்த விதைகளுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து, சிலர் கஷாயம் போல செய்து குடிக்கலாம்.. அல்லது இந்த விதைகளை காயவைத்து, பொடி செய்து எடுத்து வைத்துக்கொண்டால் போதும்.. இதிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் பலம் பெறும்..

இந்த விதைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடுவார்கள்.. இப்படி சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால், ஆண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.. குறிப்பாக, ஆண்மைத் தன்மையை அதிகரிக்க செய்து, விந்தணுக்களின் திறனையும் அதிகரிக்கும் என்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+