ஃப்ரிட்ஜில் மருந்து வைக்கறீங்களா? ப்ரிட்ஜ்ஜில் பால் வைத்தால் கெட்டு போகுதா?.. சூப்பர் டிப்ஸ் பாருங்க
சென்னை: ஃபிரிட்ஜ்ஜில் சில பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. அந்தவகையில் மருந்துகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? பிரிட்ஜில் வைத்தாலும் பால் கெட்டுப்போவது ஏன்?
ஃப்ரிட்ஜ்ஜில் நாம் வைக்கும் காய்கறிகள், உணவுப்பொருட்கள் ஆரோக்கியமானது இல்லை என்பது தெரிந்தும்கூட, மீண்டும் மீண்டும் அதுபோலவேதான் செய்கிறோம். ஆனால், ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதால் உணவுப்பொருட்களின் ஊட்டச்சத்துக்களின் தரம் குறைவாக சொல்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

உருளைக்கிழங்கு: தக்காளி, உருளைக்கிழங்கு உட்பட கிழங்கு வகைகள், பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய்கள், மிளகாய் வகைகள், முட்டைகள், எண்ணெய்கள், பூண்டு, மசாலா தூள்கள், காபி தூள், கிரீம்கள், ஜாம்கள், கெச்சப்கள், தேன் பிரெட் வகைகள் போன்றவற்றை வைக்கக்கூடாது..
சிக்கன், மீன், மட்டன், போன்ற இறைச்சி வகைகள் 3 நாட்களுக்கு மேல் வைக்கக்கூடாது.. பிரீசர் என்றால், 3 மாதங்களும் கூட வைக்கலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லி ஃபிரிட்ஜில் வைப்பதால் சீக்கிரத்திலேயே வாடிவிடும்.. எனவே, இதனையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இந்த உணவுகளை வைக்கலாம்.
மூலிகைகள்: ஃப்ரிட்ஜ்ஜை பொறுத்தவரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி உட்பட மூலிகைகளையும் கீரைகளையும் வைக்கக்கூடாதாம்.. அப்படி வைத்தால், அவைகளின் சத்துகள் முழுவதுமாகவே வீணாகிவிடும். கீரைகளை எப்போது வாங்கினாலும், நீர் நிறைந்த பாத்திரத்தில், தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்துவிட்டாலே வாடாமல், காய்ந்துவிடாமல் பசுமையாக இருக்கும்.
வாழைப்பழங்கள் மற்றும் திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. வைட்டமின் C நிறைந்த பழங்களை வைக்கக்கூடாது.. பழங்களை நறுக்கிய பிறகு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். கிருமிகளின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதிலாக முழுப் பழங்களை வைத்து, தேவையானபோது நறுக்கி, சாப்பிடலாம்.
இன்சுலின்: இன்சுலின் உட்பட சில மருந்துகளையும் பலர் ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.. இப்படி மருந்தை வைப்பதாக இருந்தால், இன்சுலின் வைப்பதற்கென்றே ஃபிரிட்ஜில் ஒரு இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், இதன் அருகிலேயே உணவுப்பொருட்கள், பூக்கள் போன்றவற்றை கூடாது. அதேபோல, மருந்துகளுக்கு பக்கத்தில், இறைச்சி உணவுகளை வைக்கக்கூடாது. காரணம், மருந்துகளில் மருந்தில், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளது.
அதேபோல பாலை எப்படி வைத்தாலும், சில சமயம் கெட்டுப்போய்விடும். பாலில் எதாவது ஒரு துளி விழுந்தாலும்கூட, கெட்டுவிடும். அல்லது திரிந்துவிடும் வாய்ப்புள்ளதால், பாதுகாப்பாக வைக்க வேண்டியிருக்கிறது.
பால் பொருட்கள்: பாலை பெரும்பாலும், ஃபிரிட்ஜின் கதவின் உட்புறம் இருக்கும் பாட்டில் ஹோல்டர்களில் வைப்போம்.. ஆனால், இந்த இடத்தில் வைப்பதுதான். பால் கெட்டுப்போக காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள் .
காரணம், ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, வெளிப்புறம் உள்ள சூடான காற்று, இந்த பாட்டில்களில் நேரடியாக பட வாய்ப்புள்ளது.. குளிர்ச்சியான மற்றும் வெப்பக்காற்று மாறி மாறி பால் பாத்திரத்தில் படும்போது, பாலில் உள்ள பாக்டீரியா வளர சரியான சூழல் உருவாகிவிடும்.,. இதனாலும் பால் கெட்டுவிடும்.
டிப்ஸ்: எனவே, வெளிப்புற காற்று படாதபடி ஃபிரிட்ஜ் உள்பக்கமாக அல்லது ஃப்ரீசருக்குள் பாலை வைப்பது மிகவும் நல்லது. இதனால், பாலின் வெப்பநிலை பாதிக்காது. குளிரும் ஒரே சீராக பாலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும். மேலும், ஃப்ரீசரில் உறைபனி உள்ளதால், பாலில் உள்ள பாக்டிரியாக்கள், இந்த சூழலில் செயல்பட முடியாது.. எனவே பால் கெடாமல் பாதுகாப்பாகவே இருக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications