White Rice vs Brown Rice: வெள்ளை அரிசி- பிரவுன் அரிசி! எது ஆரோக்கியமானது?
சென்னை: வெள்ளை அரிசி சிறந்ததா இல்லை பழுப்பு நிற அரிசி ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். வெள்ளை அரிசிப் பயன்பாடு குறைந்து, பழுப்பு அரிசி (Brown Rice) பலரது உணவில் இடம்பிடித்துள்ளது. இது ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
அதேபோல, சிவப்பு அரிசியும் (Red Rice) முக்கியத்துவம் பெற்று வருகிறது. பழுப்பு அரிசியை விட சிவப்பு அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா, எது சிறந்தது போன்ற பலரது கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

வெள்ளை அரிசியை விட பிரவுன் ரைஸ் மற்றும் ரெட் ரைஸ் ஆகியவை அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்தவை என்பதால் எடை குறைப்புக்கு ஏற்றவையாக இருக்கின்றன.
இவை இரண்டும் முழு தானிய வகை அரிசிகள் என்பதால், அவற்றின் உமி மற்றும் மேல் தோல் அகற்றப்படாமல் இருப்பதால் அதிக நன்மைகளைத் தருகின்றன. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இரண்டு வகை அரிசிகளும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவுகின்றன.
இதனால் அதிக உணவு உட்கொள்ளும் போக்கு குறைந்து, எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. பிரவுன் ரைஸ் அதிக நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், பி வைட்டமின்கள், இரும்பு போன்றவற்றால் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
எடை குறைப்புக்கு இது நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. ஆனால் ரெட் ரைஸ் இதைவிட சிறப்பானது என்பது நிபுணர்களின் கருத்து. ரெட் ரைஸில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதன் கிளைசமிக் இன்டெக்ஸ் பிரவுன் ரைஸை விட குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை வேகமாக உயராமல் கட்டுப்படுத்துகிறது.
இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும், எடை குறைப்பு முயல்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானது. ரெட் ரைஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, ஜிங்க், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
அழற்சியைக் குறைத்து, எலும்புகளை வலுப்படுத்தி, தசைப்பிடிப்புகளைத் தடுக்க உதவுகின்றன. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சீராகி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது: வெள்ளை அரிசியை குறைத்து, பிரவுன் ரைஸ் அல்லது ரெட் ரைஸை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். ரெட் ரைஸ் ஊட்டச்சத்து அடர்த்தியில் சிறப்பாக இருப்பதால், அதை முன்னுரிமை அளிக்கலாம். இருப்பினும் இரண்டுமே எடை குறைப்பு உணவுத்திட்டத்தில் சிறந்த மாற்று வழிகள்.
சமச்சீரான உணவு, உடற்பயிற்சியுடன் இவற்றை சேர்த்தால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். சிவப்பு அரிசி உடலில் ஏற்படும் வீக்கங்கள், குறிப்பாக இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இது அதிக இரும்புச்சத்தை வழங்கி இரத்த உற்பத்தியைப் பெருக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மேலும், இதில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க துணைபுரிகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை பயக்கிறது, மேலும் இதயத்தையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்க உதவும்.
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை நிர்வகிக்க ஏதுவாகும். இப்படி பல பயன்கள் தருவதால், பழுப்பு அரிசி உட்கொள்பவர்கள் சிவப்பு அரிசியை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்து ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications