75 கிலோ எடையை குறைத்த 150 கிலோ இளைஞர்! நடக்க முடியாத தொப்பை டூ ஃபிட்னஸ் மாடல்.. சாதித்தது எப்படி?
சென்னை: உடல் பருமன் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், பலரும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நமன் சவுத்ரி என்ற இளைஞர் எடை இழப்பு பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் 2 ஆண்டுகளில் சுமார் 75 கிலோவை குறைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நமன் சவுத்ரி. அவரது எடை மெல்ல அதிகரித்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் 150 கிலோ எடையை அவர் அடைந்தார். இதனால் அவரால் வெளியே கூட செல்ல முடியவில்லை.

உடல் பருமன்
எங்குச் சென்றாலும் அவரை பலரும் நேரடியாகவே கிண்டல் அடிக்க தொடங்கினர். இதனால் நாளுக்கு நாள் அவரது தன்னம்பிக்கை குறைந்து வந்தது. ஆனால், ஒரு நாள் அவர் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தார்.
இதனால் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்த அவர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கினார். ஒர்க் அவுட், ஜிம். வீட்டு சாப்பாடு என வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்றினார். உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைத்துக் கொண்டு புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினார். இதை எந்தவொரு சமரசமும் இல்லாமல் தொடர்ந்து பின்பற்றினார்.
75 கிலோ குறைத்தார்
இதன் மூலம் அவரால் வெறும் இரண்டரை ஆண்டுகளில், 75 கிலோவை குறைக்க முடிந்தது. உடலை ஃபிட்டாக மாற்றிய அவர், இதன் மூலம் தன்னம்பிக்கை பெற்றதாகவும் கூறுகிறார். வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட்டதால் உடல் எடை குறைந்தது மட்டுமின்றி சருமத்தையும் அது மேம்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் சரும பளபளக்க என்ன காரணம் எனக் கூட கேட்டுள்ளனர். ஆனால், அவர் சருமத்திற்கு எல்லாம் தனியாக எதையும் செய்யவில்லையாம். எளிமையான, சுத்தமான உணவு அவர் சாப்பிட்ட நிலையில், சருமம் பளபளக்க அதுவே உதவியாக இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் 150 கிலோ எடையுடன் இருந்த நமன் இப்போது ஒரு ஃபிட்னஸ் மாடலாக இருக்கிறார். கடந்த 2.5 ஆண்டுகளாக உடல் எடையைக் குறைத்தது எப்படி என்பது குறித்த தகவல்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஆவணப்படுத்தி வருகிறார். இது பலருக்கும் இப்போது உத்வேகமாக மாறியிருக்கிறது.
எடை குறைப்பு
தனது எடை இழப்பு பயணம் குறித்து நமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த எடை இழப்பு பயணம் வியர்வை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை இணைந்தது. இதில் எனது ஒவ்வொரு துளி வியர்வையும், ஒவ்வொரு தியாகமும் இலக்கை நெருங்கச் செய்தன. எடை குறைப்பு மட்டுமின்றி உடல் வலிமை, நம்பிக்கை பெற இது உதவியது. என்னால் இதைச் செய்ய முடிந்தது என்றால் நிச்சயம் உங்களாலும் செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நமன் இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொண்ட உணவு குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
காலை உணவு (400 கலோரி, 35 கிராம் புரதம்)
ஆப்ஷன் 1:
முட்டையின் வெள்ளைக்கரு 4 மற்றும் ஒரு முழு முட்டை (18 கிராம் புரதம்) ஆகியவற்றை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து பொடிமாஸ் செய்து சாப்பிடலாம்.. அத்துடன் கேப்சிகம் மற்றும் கீரை சேர்த்து 50 கிராம் பன்னீர் புர்ஜி (11 கிராம் புரதம்) எடுத்துக் கொள்ளலாம். மேலும், அத்தோடு 1 மல்டிகிரைன் டோஸ்ட்டை (4 கிராம் புரதம்) சாப்பிடலாம்.
முட்டை வேண்டாம் என நினைப்போர் காய்கறி உடன் 60 கிராம் சோயா (26 கிராம் புரதம்) சாப்பிடலாம். 50 கிராம் பனீர் (11 கிராம் புரதம்), 1 சிறிய மல்டிகிரைன் டோஸ்ட் (4 கிராம் புரதம்) சாப்பிடலாம்.
மதிய உணவு (350 கலோரி, 30 கிராம் புரதம்)
100 கிராம் சோயா (52 கிராம் சோயாவில் 25 கிராம் புரதம் கிடைக்கும்), வெங்காயம், தக்காளி சேர்த்துச் சாப்பிடலாம். 100 கிராம் வேகவைத்த ப்ரோக்கோலி (3 கிராம் புரதம்), 1 சிறிய ரொட்டி (3 கிராம் புரதம்) ஆகியவற்றை சேர்த்துச் சாப்பிடலாம்.
மாலை சிற்றுண்டி (200 கலோரி, 20 கிராம் புரதம்)
தயிர், எலுமிச்சை மற்றும் மசாலாப் பொருட்களுடன் மரைனேட் செய்யப்பட்ட 150 கிராம் குறைந்த கொழுப்புள்ள பன்னீர் டிக்கா (20 கிராம் புரதம்) சாப்பிடலாம். கிரில் அல்லது ஏர் ப்ரை செய்யப்பட்ட பன்னீரை சாப்பிடலாம்.
இரவு உணவு (350 கலோரி, 35 கிராம் புரதம்)
பருப்பு (150 கிராம்), 100 கிராம் பன்னீர் (15 கிராம் புரதம்), காய்கறிகளுடன் சேர்த்து 100 கிராம் வெள்ளரி + தக்காளி சாலட் (2 கிராம் புரதம்), 1 சிறிய ரொட்டி (3 கிராம் புரதம்) ஆகியவற்றை சாப்பிடலாம்.
இந்த உணவுகளைச் சாப்பிடும் போது தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி 1300-1400 கலோரியாகவும் புரதம் 120 கிராமாகவும் இருக்கும். இது எடை இழப்பு பயணத்தை எளிதாக்க உதவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications