சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு ஏன் முதுகுவலி வருகிறது...சரிசெய்ய சில டிப்ஸ்!
சென்னை: இன்று பெரும்பாலான பெண்களுக்கு சுகப்பிரசவம் குறைந்து, சிசேரியன் முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. பொதுவாக தாய்க்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் எதாவது பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்து பிறகு சிசேரியன் முறையில், கருப்பையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுப்பது ஆகும். இந்த சிசேரியன் (Cesarean delivery) டெலிவரி ஏற்படுவதற்கு ஒன்று தாய்கான காரணம், குழந்தைக்கான, அல்லது அவசர (Emergency reason) காரணமாக இருக்கும்.
சிசேரியன் (C-Section) டெலிவரிக்கு முக்கிய காரணங்கள், குழந்தைக்கு போதுமான (sufficient oxygen) ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால், இதய துடிப்பு வேகமாகி மூச்சுத்திணறல் ஏற்படுவது, அல்லது தொப்புள் கொடி சுற்றிகொள்ளவதால் குழந்தைக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காமல் இருத்தல், அல்லது குழந்தை சரியான நிலையில் இல்லாமல், குறுக்கு (transverse) நிலையில் இருத்தல், அல்லது குழந்தையின் தலை பெரியதாக இருப்பதால் சரியாக வெளியே வரமுடியாமல் இருப்பது, குழந்தையின் தலை கீழே வராமல் இருப்பது, இப்படி தவறான நிலையில் குழந்தை காணப்படுமானால், சிசேரியன் செய்யப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் தாய்கான காரணங்களில், கர்ப்பப்பையில் உள்ள நஞ்சு கர்பப்பை வாய் அடைத்து குழந்தை வெளிய வரமுடியாமல் இருத்தல், அல்லது தாய்க்கு இரத்தப்போக்கு சீக்கிரம் வெளியேற ஆரம்பித்தல், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதய சம்பந்தமான பிரச்சனைகள், தாயின் இடுப்பு எலும்புகள் சிறியதாக இருத்தல் (pelvic disproportion), அல்லது சுகப்பிரசவத்திற்கு காத்திருக்கும் போது சரியான முன்னேற்றம் இல்லாமல், வலி வராமல் நேரம் நீடித்துக்கொண்டு (delay in progress or arrested progress) இருக்கையில், இது போன்ற பல்வேறு காரணத்தினால், அவசர நோக்கத்திற்காக மருத்துவர்கள் தாயையும், குழந்தையையும் காப்பாற்ற சிசேரியன் செய்யப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அறுவைசிகிச்சை (Surgery) : பொதுவாக அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு, சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு முதுகு வலி வருவது என்பது பொதுவான கருத்து. ஆனால் முதுதண்டில் போடப்படும் மயக்க மருந்துகளினால், முதுகு வலி ஏற்படுவதில்லை எனபதை, ஒரு சில ஆய்வில் உறுதியாகியுள்ளது. பின்பு ஏன் சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு எல்லா பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்பதற்கான காரணகங்களை பார்ப்போம்.
முதுகெலும்பு மயக்க மருந்து (Spinal Anesthesia) : சிசேரியன் பிரசவத்திற்கு பொதுவான மயக்க மருந்து கொடுக்காமல், முதுகெலும்பு மயக்க மருந்து (Spinal Anesthesia) போடுவது வழக்கம், அதிலும் முழு உடலுக்கு அல்லாமல், (Regional Anesthesia) ஒரு பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுப்பதாகும். இதனால் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிமட்டும் மயக்கமடையச் செய்து, அறுவைசிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறையாகும்.
முதுகுவலி வருகிறது முக்கிய காரணங்கள் (Main Reasons) : சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வருகிறது மிக முக்கிய காரணங்கள், மகப்பேறு காலத்தில் ஏற்படக்கூடிய அதிக உடல் எடை, பின்பு பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருப்பதும், இரண்டாவதாக அவர்கள் உட்காரும் நிலை (Sitting position), மற்றும் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை (Feeding position) மிக மோசமாக குனிந்த நிலையில் உட்காருவது, மூன்றாவது, பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகிய காரணத்தினால், சில மாதங்களில் முதுகு வலி வருவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
முதுகுவலியிலிருந்து குணமாக முக்கிய குறிப்புக்கள் (Tips) : சுகப்பிரசவத்தைவிட, சிசேரியன் (C-Section) டெலிவரிக்கு பிறகு அதிக வலி, கடுமையான இரத்தப்போக்கு, தொற்று ஏற்படலாம், இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் எடுக்கும், இரத்த உறைவு போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. முதுகுவலியை தடுப்பதற்கு சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செய்தாலே போதும், நிச்சயம், முதுகுவலியிலிருந்து முற்றிலும் குணமடையலாம். எனவே கட்டாயம் பிரசவத்திற்கு பிறகு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதும், நிமிர்ந்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுப்பதும், தினமும் உடற்பயிற்சி செய்துவந்தால், விரைவில் வலியிலிருந்து குணமாகலாம்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications