உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை குறையவில்லையா? ஏன்? டாக்டர் விளக்கம்
சென்னை: உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் குறையவில்லையா? என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். தெரிந்து கொள்ளலாம். எப்படி குறைக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து டாக்டர் ஹரிஹரன் என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறுகையில் உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை குறையவில்லையா? ஏன்?

"டாக்டர், நான் பல வருஷமா சுகர் பேஷன்ட். டயட்னு பெருசா ஒன்னும் கிடையாது. மருந்துகள் எடுக்குறேன். ஆனா நான் உடற்பயிற்சி செய்யிறதுனால சுகர் ஒன்னும் குறைய மாட்டேங்கிது. ஏன்?" என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
எந்த டாக்டரும், உங்களுக்கு சுகர் இருப்பதை கண்டுபிடித்தால், முதலில் உணவுக்கட்டுப்பாடு பற்றிக் கூறுவார், அடுத்தது உடற்பயிற்சி, அதற்குப் பின் தான் மருந்துகளே. இது ஒரு உலகளாவிய புரோட்டோகால். உடற்பயிற்சி சுகரை நன்றாக குறைக்கும்.
எப்படிக் குறைக்கும்?
1. Muscle building exercises- உணவில் உள்ள மாவுச்சத்து, க்ளுக்கோசாக மாறி, இரத்தத்திற்குள் செல்லும். உடலிலேயே அதிகம் க்ளுகோசை பயன்படுத்துவது தசைகள் தான். தசை கூடினால், க்ளுகோஸ் அதிகம் உள்ளே செல்லும், சுகர் குறையும்.
2. மூன்று வேளையும் சாப்பிட்ட முக்கால்மணி நேரம் கழித்து 15நிமிடங்கள் வாக்கிங் செல்வது/வேறு ஏதாவது செய்வது- வயிற்றில் இருந்து உள்நுழையும் க்ளுக்கோஸ், ரத்தத்தில் சென்று, நேராக தசைகளுக்கும், இதயத்திற்கும் தீனியாவதால், சுகர் குறைகிறது.
உடற்பயிற்சி செய்தாலும் சுகர் குறையாமல் இருக்க காரணங்கள் என்ன?
1. Dawn Phenomenon- சுகர் இருக்கும் 10% நபர்களுக்கு இது இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் உடைந்து, புரதங்கள்-->க்ளுகோசாக மாறும். உணவு உண்டால் தான் இது நிற்கும்.
2. மிக அதிக உடற்பயிற்சி- அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால், ஈரல் அதிக க்ளுக்கோசை சுரக்கும்.
3. சும்மா தினமும் ஒரே பயிற்சியை செய்வது. தசையை வளர்க்க வேண்டுமானால், உடற்பயிற்சியை கூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஜாலியாக ஒரு மணி நேரத்தில் நாலு கிலோமீட்டர் நடப்பதை பத்து வருடமாக செய்தாலும் சுகர் குறையாது. ஜிம் சென்று பளு தூக்குங்கள்-அதன் எடையை ரெகுலராக அதிகப்படுத்திக்கொண்டே இருங்கள்.
4. நன்றாக மாவுச்சத்து உணவுகளை உண்பது. அதான் எக்சர்சைஸ் செய்கிறோமே, நைட்டு ஃபுல்கட்டு கட்டுவோம் என உண்டால், எக்சர்சைஸ் செய்தாலும் கொஞ்சம் தான் க்ளுகோஸ் பயன்பாடு இருக்கும். பாக்கி அதிக க்ளுக்கோஸ் ரத்தத்தில் தான் இருக்கும்.
5. எக்சர்சைஸ் செய்த உடனே சுகர் அளவுகளைப் பார்ப்பது-தசை வளர்ச்சி என்பது நாள் முழுக்க நடப்பது. மூன்று மாத HbA1c அளவு தான் உங்களுக்கு உடற்பயிற்சி பலன் தந்ததா என சொல்லும். அவ்வப்போது சுகர் செக் செய்து பார்த்தால் பலன் தெரியாது.
நீங்கள் நடைப்பயிற்சி மட்டும் செய்கிறீர்களா அல்லது தசைப்பயிற்சியும் (Weight training) செய்கிறீர்களா? கீழே பதிவிடுங்கள்! என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications