நகங்களில் நிறம் மாறுவது ஏன்? இதன் அறிகுறிகள் என்னென்ன?
சென்னை: அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் நல குறைவுகள், நோய்க்கான அறிகுறிகள் நம்முடைய நகங்களில் தெரியும். நகங்கள் நம் உடலின் உள் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கின்றது. பொதுவாக அனைவருக்கும் நகங்களில், சாதாரண பூஞ்சை (fungal infection) தொற்று ஏற்படும், ஆனால் தண்ணீர் உள்ள இடத்தில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி பூஞ்சை தொற்று, மற்றும் நகசுத்தி ஏற்படும். நகங்களில் நிறமாற்றம், (zinc, nutrition & minerals deficeincy) துத்தநாகக், ஊட்டச்சத்து மற்றும் கனிம பற்றாக்குறைகளினால் ஏற்படக்கூடியவை, 95% நகங்களின் நிறமாற்றம் சில நோய்களுக்கான அறிகுறிகளாகும், இதனை வைத்து உள்ளிருக்கும் வியாதிகளை கண்டறியலாம்.
நகங்களில் நிறம் மாறுவதற்கான மற்றொரு காரணம் ரசாயனம் பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவது, சலவை சோப்பு பயன்படுத்துதல், கை கழுவுவதற்கு இரசாயன சோப்புகளைப் பயன்படுத்துவது, புகைபிடிப்பவரின் நகங்கள், புகையிலையில் உள்ள நிகோடினால் நகத்தை மட்டுமே பாதிக்கும்.

ஒரு சிலருக்கு தோல் பிரச்சனைகளால் நகத்தில் நிறமாற்றங்கள் வரும். பொதுவாக ஆரோக்கியமான நபருக்கு, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகத்தின் கீழே ஒரு பிறை நிலா வெள்ளை வளைவு இருந்தால், அதற்கு லுனுலா (Lunula) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த வெளிர் வெள்ளை நிறம் கட்டை விரலில் தான் இருக்கும். சிலருக்கு நகங்கள் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும், மேலே மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் எதற்கு பெயர் (Terry's Nail). இவைகள் கல்லீரல், நீரிழிவு நோய், இதய சம்பந்தமான பிரச்சனை, சிறுநீரக நோய், hyperthyroidism காரணங்கள் இருக்கும்.
சிலருக்கு அடிக்கடி நகங்கள் உடைந்து, உடல் ஆரோக்கிய குறைவை குறிக்கிறது. பாதி வெள்ளை பாதி இளஞ் நிறத்தில் இருந்தால் சிவப்பு (Lindsay's Nail) என்று அழைக்கப்படும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நபருக்கு இருக்கும். வேறு சிலருக்கு நகம் முழுவதும் வெள்ளையாக இருக்கும் (White Nails), புரதச்சத்து குறைபாடு அல்லது கல்லீரல் பிரச்சனை இருக்கும். வயதானவர்களுக்கு கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்படும்போது, நகத்தின் மேற்புறத்தில் புள்ளி புள்ளியாக வரலாம்.
வெளிறிய (Pale White) நகங்கள் இருப்பவர்களுக்கு இரத்த சோகை இருக்கும். வெள்ளை புள்ளிகள் உள்ள நகங்கள் சிறு குழந்தைகளுக்கு காணப்படும், இவை துத்தநாக (Protein) குறைபாடு மற்றும் நோய்த்தொற்றின் அறிகுறியாக காணப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் இருந்தால் தைராய்டு, மஞ்சள் காமாலை, பூஞ்சை தொற்று ஆகியவற்றைக் குறிக்கிறது. பச்சை நகங்கள் ஒரு பாக்டீரியா தொற்று, ஈரமான இடத்தில் வேலை செய்யும் போது வரும். நகங்களின் மையத்தில் உள்ள கருப்பு கோடுகள் தோல் புற்றுநோயைக் குறிக்கிறது. எனவே இந்த அறிகுறிகள் காணப்படுமானால் மருத்துவரை அணுகி சரியான முறையில் சிகிச்சை பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications