பரவி வரும் காய்ச்சலை தடுக்க...எளிய உணவு முறைகளை தெரிந்துகொள்ளவோம்
சென்னை: சாதாரணமாக மனிதனின் உடல் வெப்பநிலை எப்போதும் 98.6 F இருக்கும், ஆனால் நோய் உண்டாகும் நுண்ணுயிர்களின் தொற்று ஏற்படும்போது, உடலின் வெப்பநிலை உயர்ந்து, காய்ச்சல் (Fever) காணப்படுகிறது. மேலும் நீர்சத்து குறைந்து உடல் சோர்வு, கண்கள் சிவந்து, தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, தொண்டை வலி, மூக்கடைப்பு, குளிர், நடுக்கம் குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இது பெரும்பாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வருவதற்கு முக்கிய காரணம்.

காய்ச்சல் பரவ முக்கிய காரணிகள்
பொதுவாக அனைத்து வயதினருக்கும் வருவதற்கு காரணம், தட்பவெப்ப நிலை மாறும்போது, கொசு மூலம், பாதிக்கப்பட்டவர் பேசும்போது உமிழ் நீர்படுவது, தும்மும்போது, இரும்மும்போது, அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு, காற்று மூலம், சுத்தமில்லாத குடிநீர், போன்ற பல காரணங்களால் காய்ச்சல் பரவும். மேலும் இந்த அறிகுறிகள் பொதுவாவை என்பதால், காய்ச்சலின் வீரியத்தை கண்டறிந்து, வைரஸ், டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற எந்த வித காய்ச்சல் என்பதை, இரத்த பரிசோதனை மூலம் எளிதில் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை மேற்கொள்வதும், சரியான உணவு முறைகளை பின்பற்றி ஆரம்பகால நிலையிலே காய்ச்சலை தடுத்துவிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கம் சைவ/ அசைவ உணவுகள்
காய்ச்சல் மட்டும் அல்ல, பொதுவாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், பல விதமான நோய்களின் தாக்கத்தை 80% வரை தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை, அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொண்டால், நோய் பரவும் காலத்தில், பயமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான உணவுகள், தயிர், காளான், கொண்டைக்கடலை, கேரட், ஓட்ஸ், கீரைவகைகள், கோதுமை, சம்பா ரவை, மாம்பழம், ஆப்பிள், மாதுளைப்பழம், அசைவ உணவில், ஆட்டு ஈரல், நண்டு, கோழிக்கறி, மேலும் சைவ உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின் சி, ஏ, இவை இரண்டும் உடலில் நோய் எதிர்ப்பு மிகுந்த ஆற்றலுடன் செயல்பட முக்கிய பங்கு வகுக்கிறது.
குளிர்காலத்தில் காய்ச்சலுக்கு ஏற்ற உணவு
குளிர்காலத்தில் வரக்கூடிய காய்ச்சல், பெரும்பாலும் சைனஸ், மற்றும் நுரையீரல் கோளாறுகளை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய, சிக்கன் சூப், முள்ளங்கி துவையல், மிளகு சேர்க்கப்பட்ட உணவு வகைகள், சாத்துக்குடி, ஆப்பிள் ஆகிய இவை எல்லாம் காய்ச்சல் குணப்படுத்த பெரிய அளவில் உதவும். நீர்வறட்சியை போக்க அதிக அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு, பன்றி காய்ச்சல், கொரோன, போன்ற எல்லா வித காய்ச்சலுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிலவேம்பு கஷாயம் மிக சிறந்த மருந்தாக செயல்படும் என்பது சந்தேகம் இல்லை. தினமும் காலை, மாலை இரண்டு வேலையும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு மட்டும் சற்று குறைந்த அளவு நிலவேம்பு கஷாயம் கொடுத்தால் போதும். தேவைப்பட்டால் தேன் கலந்து குடிக்கலாம். காலை உணவாக அரிசி கஞ்சியுடன், பாசிப்பருப்பு, சீரகம், 2 பல் பூண்டு, தேங்காய் பூ எல்லாம் சேர்த்து அரிசி கஞ்சி சாப்பிடலாம். 11 மணிக்கு மேல் ஆப்பிள் மைய அரைத்து, வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம், மத்திய உணவில் ரசம் ஒரு நாட்டு கோழி முட்டை, மலையில் பாலில் மஞ்சள் போட்டு நன்கு கொதிக்கவைத்த பாலை பருகலாம், இரவு ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் இது போன்ற உணவுகளை சாப்பிட்டால், விரைவில் குணமடையலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications