கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு ஃபோலிக் ஆசிட் எவ்வளவு முக்கியம்?
சென்னை: கர்ப்ப காலத்தில் ஃபோலிக் ஆசிட் எவ்வளவு முக்கியம்? இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் மகப்பேறு மருத்துவர் திவ்யா அருள் என்பவர் கூறியிருப்பதாவது: ஃபோலிக் ஆசிட்... ஃபோலேட் என்பது அதன் மூலப்பொருள் ஆகும்.. கர்ப்பம் தரிப்பதற்கு முதல் மூன்று மாதங்கள் முன்பு இருந்தே.. ஒரு பெண்..ஃபோலிக் ஆசிட் மருந்துகள் எடுப்பது நல்லது.. ஏனெனில் உருவாகும் கருவின்... டி என் ஏ மற்றும் இதர மரபணுக்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.. இதை வைட்டமின் பி-9 என்றும் வகைப்படுத்தப் படுகிறது.

சொந்தத்தில் திருமணம் செய்து கர்ப்பம் தரிக்கும் பலருக்கும்.. குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது நடக்கிறது. அப்போது அங்கே நடக்கும் ஆண். பெண் இருவருடைய மரபணு கலவையின் தரத்தை உயர்த்த போலிக் ஆசிட் மிக உன்னதமான பங்களிப்பு செய்கிறது.
பரம்பரை நோய்கள்.. மற்றும் குடும்பத்தில் யாருக்கேனும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த சூழல் உண்டாயின்.. போலிக் ஆசிட் எடுத்து கொள்வது இன்றியமையாதது..
அரசு மருத்துவமனையில் எல்லா கர்ப்பம் உறுதியான பெண்களுக்கும்.. கர்ப்பம் தரிக்க காத்திருக்கும் பெண்களுக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் மகப்பேறு உதவித்தொகை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல முறையில் சென்று அடைந்து விட்டது. அதன் பகுதியாக .. போலிக் ஆசிட் மற்றும் இரும்பு சத்து. கால்சியம் சத்து மாத்திரைகள் அனைவருக்கும் கட்டாயம் வழங்கப்படும்.
ஃபோலிக் ஆசிட் கர்ப்பகாலத்தில் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தொந்திரவுகள் நியூரல் ட்யூப் டிஃபெக்ட்ஸ் NEURAL TUBE DEFECTS மூளை நரம்பு வளர்ச்சி குறைபாடுகள் என்று சொல்லப்படும்.. அதைக் கண்டு பிடிக்க செய்யப்படும் ஸ்கேன்கள் இரண்டு..
பன்னிரண்டு வார கர்ப்பகாலத்தில்.. செய்ய படும்..NT scan.. என்ற NUCHAL TRANSLUCENCY SCAN அதில் குறைபாடு உண்டாவதை ஆமோதிக்கும் serum bio markers என்ற இரத்த பரிசோதனை..
அதே போல் இருபதாம் வாரத்தில் செய்ய வேண்டிய அனாமலி ஸ்கேன் மற்றும் fetal echo cardiogram ஃபிடல் எக்கோ கார்டியோகிராம்.. சிசுவின் இருதய.. ஜீரண மண்டலம்.. மூளை அமைப்பு.. பிறப்பு உறுப்பு குறைபாடுகள் கண்டறிய உதவும்..
neural tube defects are
OPEN SPINA BIFIDA
CLOSED SPINA BIFIDA
ANENCEPHALY
MENINGOCELE
ENCEPHALOCELE
INIENCEPHALY
CRANIORACHISCHISIS..
MENINGOMYELOCOELE...என்று வகைப்படும்..
இவ்வளவு தொந்தரவுகளைத் தடுக்கும்.. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று.
பாலக் கீரை, பசலக்கீரை கொய்யாப்பழம், நட்ஸ்கள் போன்ற உணவுகளில் இருந்தாலும் கர்ப்பம் தரித்த நிலையில் கட்டாயம் போலிக் ஆசிட் மாத்திரைகள் பிரசவம் வரை எடுத்து கொள்ள வேண்டும்.
தாயின் உடலில் உள்ள இரத்த சோகை நோய்.. உயர் ரத்த அழுத்தம்.. டயாபடீஸ்..கை கால் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் பெரிபெரல் நியூரைட்டிஸ் போன்ற தொந்தரவுகளுக்கும்.. ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியம்..
ஆரோக்கியமான தாய் மற்றும் குழந்தைகளை சமுதாயம் நல்க வேண்டும்.. அதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு.. ஒரு நாட்டின் சுகாதார துறையின் தரத்தை நிர்ணயம் செய்ய முதலில் கணக்கீடு செய்யப்படுவது.. என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications