அது ஏன் கொசுக்கள் உங்களை மட்டும் தேடி வந்து கடிக்குது தெரியுமா? பீர் குடிச்சா கொசு கடிக்குமாமே!
சென்னை: கொசுக்கள் சிலரை மட்டும் தேடி தேடி போய் கடிப்பது ஏன் என தெரியுமா? அது ஏன் உங்களை மட்டும் கடிக்குதுனு தெரிஞ்சிக்கோங்க
வீட்டில் கொசு இருக்கும். அது கடிப்பது சிலருக்கு மட்டுமே தெரியும். சிலருக்கு அந்தளவுக்கு கடிக்காது. அந்த வீடு மட்டுமில்லை. அந்த நபர் எங்கு சென்றாலும் அவர் சொல்வது இதுதான் "அது ஏன் கொசு என்னை மட்டும் தேடி வந்து கடிக்குது" என்பதுதான்.

ஒரே ஒரு வீட்டில் ஒருவரை கொசுக்கள் கடுமையாக கடிப்பதும் மற்றொருவரை அந்த அளவிற்கு கடிக்காமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்ச அவை 3 விஷயங்களை மனிதர்களிடம் இருந்து சமிக்ஞையாக பெறுகின்றன.
முதலில் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் தோலின் மணம், உடல் வெப்பம் ஆகிய மூன்றும் கொசுவுக்கு முக்கியம். இதை வைத்துதான் ரத்த வேட்டையை தொடங்குகிறது. முதலில் மனிதர்கள் வெளியே விடும் சுவாசத்தில் கார்பன் டை ஆக்ஸைடு இருக்கிறதா என பார்க்குமாம். இந்த வாயுவின் வெளியேற்றத்தை கொசு 50 அடி அல்லது 100 அடியிலிருந்து கூட உணரும்.
உடலில் தோலில் பாக்டீரியாக்கள் வசிப்பது, லாக்டிக் ஆசிட் அல்லது அமோனியாவின் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை கண்டும் கொசுக்கள் ரத்த வேட்டைக்கான நபரை அடையாளம் காணுமாம். கார்பன் டை ஆக்ஸைடு, மணம் ஆகியவற்றை தாண்டி உடலின் வெப்பமும் கொசுவுக்கு முக்கியமாம். ரத்தத்தை உறிஞ்ச சரியான நபரை தேர்வு செய்துவிட்டால் அதன் கால்களால் எந்த இடத்தில் கடித்து ரத்தத்தை குடிக்கலாம் என உணருமாம்.
3000 வகையான கொசுக்கள் உள்ளனவாம். மற்றவர்களை விட்டுவிட்டு உங்களை மட்டும் கொசு கடிப்பதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 6 காரணங்கள் உள்ளன.
1. உடலின் அளவு- அதிக எடை கொண்ட ஆட்கள் அதிகளவிலான கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவார்கள் என்பதால் அதிக எடை கொண்டவர்களை கொசுக்கள் அடையாளம் காண்கின்றன.
2. உடலின் வெப்பம்- உடலில் அதிக வெப்பம் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுமாம்.
3. எவ்வளவு அளவு வியர்வை விடுகிறீர்கள்- உடல் உழைப்பு மூலம் எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள் என்பதை வைத்தும் கொசுக்கள் உணரும்.
4. கர்ப்பம்- கர்ப்பிணிகளை கொசுக்கள் அதிகம் கடிக்கும். சாதாரண மனிதர்களை விட கர்ப்பிணிகள் 20 சதவீதத்திற்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விடுவார்கள். அது போல் கர்ப்பிணிகளின் உடல் வெப்பமும் மற்ற பெண்களை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
5. தோலில் இயற்கையாகவே வசிக்கும் பாக்டீரியா- வியர்வை மூலம் இயற்கையாக தோலில் இருக்கும் பாக்டீரியா
6. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தும் கொசுக்கள் கடிக்கும். அதாவது சாப்பிடும் போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும், பீர் உள்ளிட்ட பானங்களை குடித்தாலும் வியர்வை வெளியேறும் . இதனால் கொசுக்கள் எளிதாக கடிக்கும்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications