விஷமாக மாறும் முட்டை.. வாங்கும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. அப்பறம் ரொம்ப கஷ்டமாகிடும்!
சென்னை: நமது ஊரில் அசைவ உணவு சாப்பிடாதவர்களும் கூட முட்டையை எடுத்துக் கொள்வார்கள். முட்டையில் இருக்கும் சத்துகளே இதற்குக் காரணமாகும். முட்டை நல்லது தான் என்றாலும் கெட்டுப் போன முட்டையைச் சாப்பிட்டால் அது விஷமானதாக மாறும்.. கெட்ட போன முட்டையைச் சரியாக அடையாளம் கண்டு கொள்வது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தினசரி ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு ரொம்பவே நல்லது. சிலர் முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு.. உடலுக்கு நல்லது இல்லை என ஒதுக்கி வைப்பார்கள்.

முட்டை: ஆனால், அப்படி இல்லை.. தினசரி ஓரிரு முட்டைகளைச் சாப்பிடும் போது மஞ்சள் கருவைச் சேர்த்து தாராளமாகச் சாப்பிடலாம் என்றும் இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். முட்டை இந்தளவுக்கு நல்லது எல்லாம் ஓகே ஆனால், கெட்டுப் போன முட்டையை எப்படிக் கண்டுபிடிப்பது. அதை வாங்காமல் தவிர்ப்பது எப்படி என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி.. ஏனென்றால் கெட்டுப் போன முட்டையைச் சாப்பிட்டால் அது மோசமான உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஏன் கெட்டு போகிறது: முதலில் முட்டை எப்படிக் கெட்டுப் போகிறது.. உள்ளே என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். முட்டை உள்ளே இருக்கும் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் சிதைவதாலேயே முட்டை கெட்டுப் போகிறது. இதற்கு உள்ளே நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணமாகும். அதாவது முட்டைக்குள் கார்போனிக் ஆசிட் (carbonic acid) என்பது இருக்கும். அது நாட்கள் செல்ல செல்ல கார்பன்டை ஆக்ஸைடாக (carbon dioxide) மாறும். இது முட்டைக்குள் ஏர் பாக்கெட்களை (காற்று பாக்கெட்) உருவாக்கும்.
முட்டை நீரில் மிதக்க இதுவே காரணம். முட்டை கெட்டுப் போய்விட்டதைக் கண்டறிய இதுவும் ஒரு முக்கிய வழி.. அதாவது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் முட்டையைப் போடுங்கள்.. நல்ல நிலையில் இருக்கும் முட்டை மெல்ல உள்ளே போய்விடும். அதேநேரம் கெட்டுப்போன முட்டையில் கார்பன்டை ஆக்ஸைட் இருப்பதால் அது நீரில் மூழ்காது. அதை வைத்தே கெட்டுப் போன முட்டை என்பதைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

என்ன நடக்கும்: இப்படி முட்டை சிதைவதால் முட்டை alkalineஆக அதாவது காரத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதுபோன்ற நேரங்களில் முட்டைக்குள் இருக்கும் சல்பர், ஹைடரஜன் உடன் செயல்புரியத் தொடங்கும். இதனால் ஹைடரஜன் சல்பைட் உருவாகும். அழுகிய முட்டை நாற்றம் இதுதான் காரணம். இது ரொம்பவே ஆபத்தான ஒரு வாயுவாகும். சுவாசித்தாலே பிரச்சினையைத் தரும். முட்டையை உடைத்தவுடன் வரும் இந்த அழுகிய முட்டை வாசத்தை வைத்தும் கூட அது கெட்டுப்போன முட்டை என்பதை ஈஸியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்,
எப்படிக் கண்டுபிடிக்கலாம்: அதேபோல முட்டை ஓட்டை வைத்தே கூட வாங்கும் முன்பே நீங்கள் சிலவற்றைத் தவிர்க்கலாம். முதலில் முட்டையில் எந்தவொரு விரிசலும் இருக்கக்கூடாது. விரில் இருந்தால் அதன் வழியாக நோய்க்கிருமிகள் உள்ளே புகுந்து, முட்டை கெட்டுப் போக வைத்து இருக்கும். அதேபோல முட்டையின் ஓடு மெலிதானதாக இருந்தால் அதுவும் ஒரு அறிகுறி. முட்டை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும் நீங்கள் முட்டையைக் குலுக்கி பார்த்தும் கூட அது கெட்டுப் போய் விட்டதா இல்லையா என்பதைக் கண்டறியலாம், காதுக்கு அருகே வைத்துக் குலுக்கி பாருங்கள். அதில் இருந்து சத்தம் வரவில்லை என்றால் நல்ல முட்டை.. அதேநேரம் சத்தம் வந்தால் கெட்டுப் போய் இருக்க வாய்ப்பு அதிகம். இந்த டிப்ஸ்களை பாலோ செய்து கெட்டுப் போன முட்டையை கண்டறிந்து அதை வாங்குவதை தவிர்க்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications