Gallbladder: பித்தப்பையில் கற்கள் ஏன் ஏற்படுகிறது? புற்றுநோய் வராது! ஆனால் வந்தால் டேஞ்சர்?
சென்னை: பித்தப்பையில் கற்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பித்தப்பையில் கற்கள் ஏற்படாமல் இருக்க சில உணவு கட்டுப்பாடுகளையும் கடைபிடியுங்கள்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பித்தப்பையில் நோய் மற்றும் பித்தப்பை கற்கள் ஏற்பட என்ன தான் காரணம் என்பது தெரியுமா?

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதி. இது சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு சிறு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை.
அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இப்படி பித்தப்பை சுருங்கி விரியாமல் போனால் பித்தப்பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது. பித்தப்பையின் நலன் எவ்வளவு அவசியம் என உங்களுக்கு தெரியுமா. பித்தப்பை இல்லாமல் மனிதர்கள் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பித்தப்பையில் கற்கள் உண்டாகி பிரச்சனை வந்தால் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றி விடுவார்கள்.
பித்தப்பையில் உண்டாகும் மிகப்பெரிய பிரச்சனை பித்தப்பை கற்கள். பித்த நீரில் உண்டாகும் தாக்கத்தால் (கொலஸ்ட்ரால், எலக்ட்ரோலைட்ஸ்) பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன.
ஆண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பித்தப்பை பிரச்சனைகள் அதிகமாக உண்டாகிறது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
கர்ப்பம், ஈஸ்ட்ரோஜன், உடல் பருமன், பரம்பரை கூறு, மரபணு என பல பெண்கள் மத்தியில் பித்தப்பை பிரச்சனைகள் அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன. பித்தப்பை கற்கள் உண்டாவதில் என்ன பிரச்சனை எனில், அது உண்டாவதற்கான எந்த அறிகுறியும் பெரிதாக வெளிப்படுத்தாது.
மருத்துவ பரிசோதனை செய்து மட்டுமே கண்டறிய முடியும். எந்த காரணமும் இன்றி உங்களுக்கு அடிக்கடி அதிகமாக வயிறு வலிப்பது, இத்துடன் செரிமான கோளாறுகள் உண்டாகிறது எனில், உங்களுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டறிந்துக் கொள்ள முடியும்.
எண்ணெய் உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மேலும், அன்றாட உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வது இந்த பித்தப்பை கற்கள் பிரச்சனை உண்டாகாமல் தடுக்க உதவும்.
பித்தப்பை புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது தான். ஆனால், இது உண்டானால் மிகவும் அபாயமானது. பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன. இந்த பித்தக்கற்கள் சில நேரங்களில் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் முதுகுவலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
இந்த பித்தப்பை கற்களை சில நேரங்களில் மருந்துகளால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். கோலிசிஸ்டிடிஸ் என்பது பித்தப்பை அழற்சி எனப்படுகிறது. நம் பித்தப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இது பித்தப்பை நோய்த் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. கோலிசிஸ்டிடிஸ் கடுமையான வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நோய்த் தொற்று நீண்ட காலமாக நீடித்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.
பித்தப்பை புற்றுநோயும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பித்தப்பை கற்கள் போன்று இருந்தாலும், முதுகு மற்றும் அடி வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகும். அறிகுறிகள் தாமதமாக இருந்தால் பிறகு சிகிச்சை செய்வது கடினமாகி விடும்.
பித்தப்பை கணைய அழற்சி..
இது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும். செரிமான நொதிகள் சிறுகுடலுக்குள் வெளியேறி செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு கணையத்தை சேதப்படுத்தத் தொடங்குகின்றன. பித்தப்பை கணைய அழற்சி குடல் குழாய்களை அடைக்கிறது. கணையத்தை இரத்த ஓட்டம் இல்லாமல் உலர்த்தி விடுகிறது. இது கணையத்தின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது (இது ஒரு தீவிர நிலை).
உணவு கட்டுப்பாடுகள்
நீங்கள் பித்தப்பை பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மஃபின்கள், குக்கீகள், கப் கேக்குகள் மற்றும் பிற வேக வைத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிகளவு டிரான்ஸ் கொழுப்புகள் பித்தப்பையில் கொழுப்பை சரியாக செயலாக்க இயலாமல் வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை பிரச்சினை இருப்பவர்கள் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
காபி..
பித்தப்பை சுருங்கிப் போவதற்கு காபி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்..
அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை உண்ணும் போது அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இனிப்புகள் வேண்டாம்..
அதிக சர்க்கரை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கடினமாக்குகிறது. இதனால் இதய நோய்கள், சிறுநீர்ப்பையில் கற்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இனிப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.
பித்தப்பைகற்களை கவனிக்காமல் விட்டால்
பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்து விடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை #அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும். சிலருக்கு இதனால் கணைய அழற்சி ஏற்பட்டு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும்.
இதர அறிகுறிகள்?
காய்ச்சல், விட்டுவிட்டு வலி, அதிவேக இதயத் துடிப்பு, மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது), தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, குமட்டல், குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம், குழப்பம், பசி இன்மை, அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல், வலது தோள்பட்டையில் வலி, பசிக்காதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும், உடல் எடை குறைவு போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications