புத்தாண்டில் ஒரு புது தகவல்! உங்களுக்கு மட்டும் ஓவர் குளிரா இருக்கா? "இந்த" பிரச்னை இருக்கலாம்! கவனம்
சென்னை: குளிர் காலத்தில் வெப்பநிலை குறையும் என்றாலும் கூட அனைவரும் ஒரே போல உணர மாட்டார்கள். உங்கள் நண்பர்கள் க்ரூபில் கூட மற்றவர்களைக் காட்டிலும் ஓரிருவருக்குக் கொஞ்சம் ஓவராக குளிர் அடிக்கலாம். இதுபோல ஓரிருவருக்கு மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் அதிக குளிர் இருக்க என்ன காரணம்.. இதற்குப் பின்னாள் உள்ள அறிவியல் காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
இப்போது குளிர் காலம் தொடங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் கடும் குளிரே நிலவுகிறது.. இந்த மார்கழி மாதம் வந்தாலே எந்த உடை போட்டாலும் ஸ்வெட்டர் கூடவே கட்டாயம் இருக்கும்.

குளிர் காலம்:
அதேநேரம் எப்போதும் குளிர் என்பதை அனைவருக்கும் ஒரே அளவுக்கு இருக்காது. நம்மில் சிலருக்கு மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் அதிக குளிர் இருக்கும். இதுபோல நடக்க சுற்றுப்புற வெப்பம் குறைவதைத் தாண்டிலும் சில அறிவியல் காரணங்கள் உள்ளன. அதாவது உங்களுக்கு மட்டும் அதீதமாகக் குளிர் அடிக்கிறது என்றால் அது வைட்டமின் குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக உடல் வெப்பநிலையைப் பராமரிக்கும் செயல்முறை தெர்மோர்குலேஷன் என்று குறிப்பிடப்படுகிறது.. இரும்பு, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் குறைபாடு ஏற்படும் போது இந்த தெர்மோர்குலேஷன் பாதிக்கப்படும். இதனால் வெப்பத்தை உங்கள் உடலால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் போக, அதிக குளிரை நீங்கள் உணர்வீர்கள்.
இரும்பு சத்து:
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து முக்கியம். இந்த சிவப்பு அணுக்கள் தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. உடலில் போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் இல்லாமல் போனால்.. உங்கள் தசைகள் மற்றும் திசுக்களில் போதுமான வெப்பத்தை உருவாக்க முடியாது. இதை ரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. அதீத குளிர், சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பதால் அதிக குளிரை ஒருவர் உணர்வார்கள்.
வைட்டமின் குறைபாடு
அடுத்து வைட்டமின் பி12.. இதுவும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவும் சிவப்பணுக்களின் உற்பத்தியைப் பாதித்து ரத்த சோகைக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி12 குறைபாடும் கூட தெர்மோர்குலேஷனை பலவீனப்படுத்தி அதிக குளிரை உணர வைப்பதாக இருப்பதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
ஃபோலேட் அல்லது வைட்டமின் B9 கூட நமது உடலுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இது வைட்டமின் B12 உடன் இணைந்து சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகிறது. ஃபோலேட் குறைபாடு ரத்த அணுக்களின் உற்பத்தியைக் கணிசமாகப் பாதிக்கிறது. , ஃபோலேட் குறைபாடு உள்ளவர்களுக்கும் திசுக்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதீத குளிரை அனுபவிப்பார்கள் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இதுவும் முக்கியம்:
நமது சருமத்திற்கு வைட்டமின் சி முக்கியம் என்பது பலருக்கும் தெரியும். க்ரீம் விளம்பரங்களில் கூட இதனால் தான் வைட்டமின் சி குறித்துப் பேசுவார்கள். ஆனால், அதையும் தாண்டி இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது உடலில் போதியளவில் வைட்டமின் சி இல்லையென்றால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்காது. இது ரத்த சோகையை ஏற்படுத்தி அதீத குளிரை உணரச் செய்யும்.
அதேநேரம் உங்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகக் குளிரடிக்கிறது என்பதற்காகவே உங்களுக்கு ரத்த சோகை என்ற முடிவுக்கு வர வேண்டாம். இதற்கு வயது, ஹார்மோன் சமநிலையின்மை, பிற உடல்நிலைகள் கூட காரணமாக இருக்கலாம்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை யாரும் நிச்சயம் மருத்துவ ஆலோசனையாகக் கருதக் கூடாது. உங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications