மழைக்காலம் வந்தாச்சு.. அடிக்கடி சளி பிடிக்குதா? இதை டிரை பண்ணுங்க.. ஹெல்தியா இருக்கலாம்!
சென்னை: மழைக்காலம் வந்துவிட்டாலே, கூடவே மழைக்கால நோய்களும் வர தொடங்கிவிடும். குறிப்பாக பலருக்கும் மழைக்காலங்களில் சளி பிடித்துகொள்ளும். ஒருசிலருக்கு ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். ஆனால் ஒருசிலருக்கு சளியின் தீவிரம் அதிகமாக இருக்கும். இதற்கு வைட்டமின் பற்றாக்குறை தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். இது பற்றி இங்கு பார்க்கலாம்.
வெயில் காலம் முடிந்து பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி ஜனவரி - பிப்ரவரி வரை குளிர்ச்சியான காலம்தான். பொதுவாக குளிர் காலத்தில் சில குளிர் கால நோய்களும் மக்களை தாக்க தொடங்கிவிடும். அதில் குளிர் காலத்தில் பொதுவாக பலருக்கும் சளி பிடிப்பது வாடிக்கையான ஒன்றுதான். சிலருக்கு சளி பிடித்தாலும் அவ்வளவு தீவிரமாக இருக்காது. எளிதாக சரியாகிவிடும்.

வைட்டமின் பற்றாக்குறை: ஆனால் சிலருக்கு சளியின் தீவிரம் அதிகமாக இருக்கும்.. இதற்கு உடலுக்கு அவசியம் தேவைப்படும் வைட்டமின் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. அதாவது வைட்டமின் பி 12 பற்றாக்குறை இருந்தால், எளிதாக உங்களுக்கு சளி பிடிக்கும். ரத்த சிவப்பணுக்கள் மறு உற்பத்தியில் வைட்டமின் பி 12 முக்கிய பங்காற்றுகிறது.
ரத்த சோகை: உடலுக்கு தேவையான ஆக்சிஜன்களை கடத்துவது இந்த சிவப்பணுக்கள்தான். வைட்டமின் பற்றாக்குறை இருந்தால் சிவப்பணுக்களை நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே பி12 பற்றாக்குறை இருந்தால் ரத்த சோகை போன்றவை ஏற்படலாம். பி 12 பற்றாக்குறையும் அடிக்கடி சளி பிடிக்க ஒரு காரணம் ஆகும். வைட்டமின் பி 12 பற்றாக்குறை இருந்தால் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
அறிகுறிகள் என்ன?: குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவையும் வைட்டமின் 12 க்கான ஒரு காரணமாக இருக்கும். நரம்பு மண்டல செயல்பாடுகளையும் குடல் ஆரோக்கியத்தையும் பி 12 பற்றாக்குறை பாதிக்கும். கவனம் செலுத்துவதில் சிரமம், அறிவாற்றல் மாற்றங்கள் ஆகியவையும் வைட்டமின் பி12 பற்றாக்குறையை காட்டும் அறிகுறிகளில் ஒன்றாகும்.
இது போன்ற அறிகுறிகளை நீங்கள் ஒருங்கிணைந்து உணர்ந்தீர்கள் என்றால், கொஞ்சம் அலர்ட் ஆவது அவசியம். உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசித்து அவருடைய அட்வைஸை பெறுவது நல்லது. பி 12 பற்றாக்குறை நீண்டகாலம் இருந்தால், உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். வைட்டமின் பி 12 சத்து நிறைந்த உணவுகள் எவை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
என்னென்ன சாப்பிடலாம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி12 உள்ளது. கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃ போலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. முட்டை, பால், நெய், தயிர், மீன் போன்றவற்றிலும் பி12 அதிகமாக உள்ளது.
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவல் என்பதும் தனிப்பட்ட உடல்நலனுக்கு ஏற்றபடி மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பது சிறந்ததும் என்பதும் மருத்துவ நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications