அதிமதுரத்தின் அற்புதம்.. அழகு முதல் ஆரோக்கியம் வரை! மலடு நீக்கும் அதிமதுரம் பவுடர்.. 1 ஸ்பூன் போதும்
சென்னை: ஆஸ்துமா முதல் வைரஸ் தொற்றுக்கள் வரை விரட்டியடிக்கும் அதிமதுரத்தின் பல்வேறு மருத்துவ பலன்கள் தெரியுமா? பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்க அதிமதுரம் எப்படி பயன்படுகிறது தெரியுமா?
மருத்துவத்தில் இன்றுவரை முக்கியத்துவம் பெற்றிருக்கும் தவிர்க்க முடியாத மூலிகைதான் அதிமதுரம்.. நெஞ்சு சளி, இருமல், வறட்டு இருமல், சளி இருமல் போன்ற கோளாறுகளுக்கு அதிமதுரம் மருந்தாகிறது..

அதிமதுரம்: அதிமதுரத்தை பவுடர் செய்து வைத்து கொண்டாலே பல வகைகளில் பயன்படுத்தலாம். அல்லது அதிமதுரத்தூள் என்றே நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது. இதனை வெறுமனே வெந்நீரில் கலந்து சாப்பிடும்போது ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
குழந்தைகளுக்கு இருமல், சளி இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அதிமதுரப்பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும், கலந்து தந்தாலே சளி, இருமல் கட்டுக்குள் வரும்.. பெரியவர்களாக இருந்தால், இந்த பவுடரை அப்படியே வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.. அல்லது டீ தயாரித்து குடிக்கலாம்.
அழற்சி பண்புகள்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை என்பதுடன், ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளையும் தன்னுள் வைத்திருக்கிறது.. எனவே, பெண்களின் அருமருந்தாக இந்த பவுடர் பயன்பெறுகிறது..
மாதவிடாய் நேரத்தில் கை, கால் வலிக்கு இந்த அதிமதுரம்தான் உதவுகிறது.. சைனஸ் பிரச்சனை, ஒற்றை தலைவலி, தலைபாரம் வந்தால், சோம்பு கொதிக்க வைத்த தண்ணீரில் அதிமதுர பவுடரை கலந்து குடிக்கலாம்..
கர்ப்பப்பை: பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை மட்டுமல்லாமல், பெண்களின் மலட்டுத்தன்மையையும் இந்த அதிமதுரம் நீக்குகிறது. அதிமதுரம், திராட்சை இந்த இரண்டையும் சமமாக எடுத்து தூள் செய்து, 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் 5 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.. கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் இதனை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
தாய்ப்பால் இல்லாதவர்களும், ஒரு கிராம் அதிமதுர சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரக்கும். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.
அதிமதுரம்: அதிமதுரத்தின் வேர்கள் அத்தனை மருத்துவ சக்தி நிறைந்தது.. கீல்வாதம், மூட்டுவலி முதல் மலச்சிக்கல் வரை தீர்க்கக்கூடியது அதிமதுர வேர்கள்.. அதிமதுரம் கூர்மையான பார்வை திறனை தரக்கூடியது.. மனச்சோர்வு, பதட்டத்தை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை எடையையும் குறைக்கிறது இந்த அதிமதுரம். வயிற்று புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது இந்த அதிமதுரம்..
தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும் அதிமதுரம் பயன்படுத்தலாம்.. காரணம், இந்த அதிமதுரத்தில் ஃபிளவனாய்டுகள் நிறைய உள்ளதால், மிகச்சிறந்த ஊட்டச்சத்து தலைமுடிக்கு கிடைக்கிறது. அதாவது, தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியடைய செய்யும் தன்மை இந்த அதிமதுரம் பவுடருக்கு உண்டு.. அதனால், மாதம் ஒருமுறையாவது அதிமதுரத்தை ஹேர்பேக்காக பயன்படுத்தினால், ரத்த ஓட்டமும் தலைமுடியில் அதிகரிக்கும்.
தலைமுடி பிரச்சனை: இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு அதிமதுரம் உதவுகிறது.. நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் வாங்கி, அதை பவுடராக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் தேய்த்து மசாஜ் போல செய்ய வேண்டும்.. பிறகு அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால், இளநரை மறைய துவங்கும்..
இளமையிலேயே வழுக்கை இருப்பவர்கள், அதிமதுரத்தை எருமைப்பால் விட்டு விழுதாக அரைத்து, முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து குளித்து வந்தால் பலன் கிடைக்கும்..
டாக்டர்கள் ஆலோசனை: அதிமதுரம், நெல்லிக்காய் இரண்டையுமே, கடுகு எண்ணெய்யுடன் கலந்து தலைமுடிக்கு ஹேர்பேக் போட்டு வந்தால், முடி உதிர்தல் குறையும்.. இப்படி எண்ணற்ற மருத்துவ பலனை அதிமதுரம் தந்தாலும், சூரணங்களாக, மருந்தாக உட்கொள்ளும்போது மருத்துவர்களின் ஆலோசனையை முறையாக பெறுவது மிகவும் முக்கியமாகும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications