வாழைப்பூ.. மாதவிடாய் தொந்தரவு, கருப்பை கோளாறுக்கு வாரந்தோறும் வாழைப்பூ.. ஆண்களின் மருந்து வாழை பூ
சென்னை: வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? பெண்களுக்கும், ஆண்களுக்கும் எந்த வகையில் இந்த வாழைப்பூ மருந்தாகின்றன தெரியுமா?
வாழைப்பூக்களில், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற மிக முக்கியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன.. அதேபோல, வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன.

சரும பாதுகாப்பு: அந்தவகையில், சரும பாதுகாப்பை வாழைப்பூக்கள் தருகின்றன.. சிறுநீரகத்தில் கற்கள், அல்லது சிறுநீரகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உதவக்கூடியது இந்த வாழைப்பூக்கள்தான். இதனால் சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.. அத்துடன், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களையும் ஆற்றிவிடும்.
நார்ச்சத்து மிக்க இந்த வாழைப்பூக்கள் மலச்சிக்கலை தீர்க்கின்றன.. ஏகப்பட்ட புரோட்டீன்கள் இருப்பதால், எடை குறைக்க விரும்புவர்களின் பெஸ்ட் சாய்ஸாக இந்த வாழைப்பூ உள்ளது.
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவே கூடாது உணவில் இந்த வாழைப்பூக்களும் ஒன்று.. காரணம், மேம்படுத்தப்பட்ட குளுகோஸை வெளியேற்றுவதுடன், சர்க்கரை அளவையும் சீராக்குகிறது. கணையத்துக்கு வலிமை தரக்கூடியது இந்த பூக்கள். இதனால் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.
ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், கொழுப்பு சத்து உள்ளவர்கள் உணவில் வாரம் 2 முறையாவது சேர்த்து கொள்ள வேண்டியது வாழைப்பூக்கள். வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெறும்.. சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும்.
ரத்தமூலம்: ரத்த மூலத்துக்கும் நிவாரணத்தை தருகிறது.. வாரம் 2 முறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்களும், வாழைப்பூவுடன் பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து, நெய் சேர்த்து வாரம் 2 முறை சாப்பிட்டாலே உடல்சூடு தணிந்துவிடும். வைட்டமின் A உள்ளதால், கருவிழி போன்றவற்றை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்புரை போன்றவற்றை முன்கூட்டியே தடுக்கின்றன..
ஆண்களுக்கு இந்த வாழைப்பூக்கள் மிகவும் நல்லது.. விந்துவை விருத்தி செய்யக்கூடியவை என்பதால், இநத பூவை பறித்ததுமே 2 நாட்களில் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்க இந்த வாழைப்பூ உதவுகிறதாம். எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை சாப்பிடுவது ஆரோக்கியமாகும்.
வயிற்றுக்கடுப்பு: வயிற்றுக்கடுப்பு இருந்தால், வாழைப்பூவை தண்ணீரில் கலந்து, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் வெதுவெதுப்பாக குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதிலும், கர்ப்பப்பைக்கு இந்த வாழைப்பூ மிகவும் அருமையான மருந்தாகும்.. உடலில் ரத்தம் இல்லாதவர்கள் அல்லது மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு உடையவர்கள் இந்த வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிடலாம்..
வெள்ளைப்படுதல்: அல்லது இந்த பூவின் உள்ளேயிருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து, அதில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தாலும் ரத்தப்போக்கு கட்டுப்படும். வாழைப்பூவில் ரசம் செய்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீர்ந்துவிடும்..
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications