கறிவேப்பிலை கலக்கல்.. மூளைக்கு பெஸ்ட் உணவு.. மூளை நரம்பை வலுவாக்கி, ஞாபகசக்தியை கூட்டும் புரோக்கோலி
சென்னை: நம்முடைய மூளை சீரான செயல்பாட்டுடன் பணியாற்ற வேண்டுமானால், அதற்கு பிரத்யேகமான உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நம்முடைய உடலிலேயே மிக முக்கியமான உறுப்பு மூளை.. மற்ற உறுப்புகளைவிட, அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். சத்துக்கள் நிறைந்த உணவு, மூளைக்கு சரியாக கிடைக்காவிட்டால், ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும்.. இது ஞாபகமறதி, குழப்பங்கள் போன்ற பிரச்சனைகளை கொண்டுவந்துவிட்டுவிடும். அதனால்தான், மூளை சிறப்புடன் செயல்பட வேண்டுமானால், சத்தான உணவு அவசியம்..

சத்துக்கள்: அந்தவகையில், வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.. மூளை நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தையமின் என்ற சத்து உதவுகிறது.. மூளை நரம்புகளில் புண்கள் வராமல் இருக்கவேண்டுமானால், வைட்டமின் B12, உதவுகிறது.. நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட B காம்ப்ளெக்ஸ், உதவுகிறது.. மூளை வளர்ச்சிக்கு E, C வைட்டமின்கள் உதவுகின்றன.
எனவே, மூளைக்கு உதவும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது.. சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிகம் வறுத்த உணவுகளை சாப்பிடுவதும், அறிவாற்றல் உடல்நல குறைபாட்டை அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியை, அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், மிகமிக குறைவான அளவு சாப்பிடலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. நினைவாற்றல் திறனை மழுங்கடிக்க செய்வதில் ஆல்கஹாலுக்கும் நிறைய பங்கு உள்ளது. அதிகமாக மது அருந்துவது, நினைவாற்றலை குறைக்கலாம். அதேபோல, சோடா, சர்க்கரை சேர்த்த கூல்டிரிங்ஸ்களை அதிகமாக குடித்தாலும் நினைவுத்திறன் குறைபாடு வந்துவிடுமாம்.
அப்படியானால் மூளைக்கு பலம் தரும் உணவுகள் என்னென்ன தெரியுமா? வைட்டமின் E, ஃபோலேட், மக்னீசியம், செலினியம், ஃபோலிக் அமிலம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்..
கீரைகள்: இதில், கீரைகள் மிக முக்கியமானவை.. தண்டுக்கீரை, பாலக்கரை, முருங்கைக்கீரையை தவறவிடக்கூடாது.. ஞாபக மறதி, மனநோய் உட்பட அனைத்தையும் சரிசெய்து, மூளையை சீராக வைத்திருக்க கீரைகள் உதவுகின்றன.. எனவே, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிட வேண்டியது கீரைகள் ஆகும்.. உடலில் பொட்டாசியம் அதிகம் இருந்தாலோ அல்லது சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலோ, கீரையின் அளவை குறைத்து கொள்ளலாம்.
மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.. வயது முதிர்ந்தவர்களின் ஞாபக மறதி நோயை சரியாக்கும் தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு.. எனவே, மிதமான அளவில் மஞ்சளை சேர்த்து வரலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளையின் நினைவாற்றலை பெருக்கக்கூடியது. அத்துடன், ஞாபகமறதியையும் தடுக்கக்கூடியது..
நினைவுத்திறன்: இட்லி, தோசை, பிரெட் போன்வற்றிலிருக்கும் ஈஸ்ட்கள், மூளைக்கு மிகவும் நல்லது.. இது பக்கவாதம் வராமலும் பாதுகாக்கிறது.. காலிஃப்ளவர், புரக்கோலி போன்றவைகளும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கின்றன.. வால்நட் சாப்பிடும்போது மனஅழுத்தமும் குறைகிறது.. ஒமேகா 3 கொழுப்பு சத்து நிறைந்த மீன்களை, எண்ணெய்யில் பொறிக்காமல் சமைத்து சாப்பிடலாம்.
ஞாபகமறதி இருப்பவர்கள் கட்டாயம் கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.. காரணம், இந்த உணவுகளில் புதிய ரத்த செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கின்றனவாம்.
பழங்கள்: ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சை, கேரட், அன்னாசி, காலி ஃபிளவர், புரக்கோலி, முட்டைக்கோஸ், கொத்துமல்லி, வல்லாரை, கறிவேப்பிலை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை தவிர்க்கக்கூடாது..
இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்து கொண்டால், மூளை சுறுசுறுப்படையுமாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications