மீனில் பெஸ்ட்... மத்த மீனைவிட சத்துக்கள் நிறைந்த மத்தி மீன்.. கரு வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மத்திகள்
சென்னை: மத்த மீன்களில் இல்லாத சிறப்பு மத்தி மீனில் மட்டும் ஏன் இருக்கிறது? கரு வளர்ச்சிக்கு உபயோகமாகும் மத்தி மீன்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? பெண்கள் ஏன் மத்தி மீன்களை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்? சுருக்கமாக பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்புவரை ஒதுக்கப்பட்ட மீனில் இந்த மத்தி மீனும் ஒன்று.. இதனை சாளை மீன் என்றும் சொல்வார்கள்.. ஆனால், சாளைக்கும், மத்திக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. பலகாலமாகவே கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, மத்தி மீனுக்கு திடீரென மவுசு கூட துவங்கிவிட்டது.

இதய நோயாளிகள்: இதற்கு காரணம், மத்தி மீன் குறித்த மருத்துவ ஆய்வுகள்தான்.. நீரிழிவு நோயாளிகளும், இதய நோயாளிகளும் சாப்பிடக்கூடிய மீன் இது என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.
நம் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மத்தியில் உள்ளதாகவும்,இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்சப்படுவதாகவும், இதனால் இன்சுலின் தட்டுப்பாடும் குறைவதாகவும் ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள்: இன்சுலின் அதுமட்டுமல்ல, இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும், இதய நோய்கள் போன்ற அபாயத்தை குறைப்பதிலும், புரதங்கள், வைட்டமின் D, B5 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒமேகா 3 அமிலமாகும். இந்த ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கும் மத்தி மீன்கள், நீரிழிவு ஆபத்தை குறைப்பதாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் மத்தி மீனின் மவுசை எகிற வைத்துவிட்டது.
100 கிராம் மத்தி மீனில், புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் இருப்பதால், அனைவருமே சாப்பிடக்கூடிய மீனாக உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள்: 60 கிராம் மத்தி மீனில் 217 மி.கிராம் அளவு கால்சியம் இருப்பதால், வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலு இழப்பு, மூட்டு வலி, பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
அழற்சி பண்புகளுக்கு எதிராக போராடுவதால் இரத்த உறைதல் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. இதனால் மற்ற உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, இதிலுள்ள அமினோ அமிலங்கள், நரம்பு இழைகள் மற்றும் மூளையிலுள்ள செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கின்றன. இதன்காரணமாக நினைவாற்றலும் மேம்படுகிறது.
கால்சியம் சத்துக்கள்: அதேபோல, பெண்கள் கர்ப்பக்காலத்தில் இந்த மத்தியை சாப்பிட்டுவந்தால், தாய் மற்றும் சேய் இருவருக்கும் நிறைவான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.
மத்தி மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருவின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை வழங்குகின்றன.. சோரியாசிஸ், அடோபிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் செய்யும் மத்தி மீன்கள், சரும சுருக்கத்தையும் நெருங்க விடுவதில்லை. கண் பார்வையும் கூர்மை பெறும்..!!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications