மட்டன் எடுக்கறீங்களா? ஆட்டுக்கறி வாங்கினால் இதை கவனிச்சீங்களா? ஆட்டிறைச்சி தோல் இருக்கா? அப்ப கவனம்
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டனை தொடவே கூடாது. ஆனால், முழு உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பில் இருப்பவர்கள் மாதம் ஒருமுறையாவது மட்டனை சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆட்டிறைச்சியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. முக்கியமாக, பிற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, மட்டனில் ஏகப்பட்ட இரும்புச்சத்து உள்ளது.

எப்போதுமே நிறைவுற்ற கொழுப்புகள், நம்முடைய இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.. ஆனால், நிறைவுறா கொழுப்பு என்று உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறதாம்..
நிறைவுறா கொழுப்புகள்: அந்தவகையில் நிறைவுறா கொழுப்புகள், மட்டனில் நிறையவே உள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வில் கூறபபட்டுள்ளது.. மட்டனிலுள்ள பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் அளவு குறைவாகவே உள்ளதால், இவைகளை ஒரே சீராக நம்மால் உடலில் பராமரிக்க முடியும் என்று அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.
ஆனால் மட்டன் வாங்கும்போது, நெஞ்சுப் பகுதி, நெஞ்சுக்குப் பின்புறமுள்ள முதுகு தசைப்பகுதியை கேட்டு வாங்க வேண்டும். காரணம், இந்த பகுதியிலுள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். எனவே, சதை அதிகமாக இருக்கும் என்பதால், இனிமேல் தொடைப்பகுதிகளை கேட்டு வாங்காமல், நெஞ்சுப்பகுதிகளாக வாங்கி சமைத்தால் கூடுதல் ஆரோக்கியமாம்.
சிறந்த மட்டன்: மட்டன் கடையில், ஆடுகளை வெட்டி தொங்கவிட்டிருக்கும்போது, அதிலிருந்து வடிகின்ற ரத்தத்தை வைத்தே ஆடுகளின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.
நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்குமே துளிகூட தங்காமல் உடனே வடிந்துவிடும்... ஆனால், ஆட்டுக்கு நோய் இருந்தால், அல்லது வேறு ஏதாவது உடலில் பாதிப்பு இருந்தால், வெட்ட அந்த ஆட்டின் உடலில் ரத்தம் ஆங்காங்கே தேங்கியிருக்குமாம்.. இதுவே ஆடு இறந்ததும் அறுத்ததாக இருந்தால், ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும்.
மட்டன் தோல்: ஒரே பருவத்தில் உள்ள 2 ஆடுகள் வெட்டப்பட நேரிடுகிறது என்றால், ருசியுள்ள பெட்டை ஆட்டின் கறியையே தேர்ந்தெடுக்கலாம். அதேபோல, மட்டனில் தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும்.. காரணம், இந்த தோல் பகுதிகளில்தான், அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதுதான், இதய கோளாறுகளுக்கும் காரணமாகின்றன.. ஆடுகளை வெட்டி, 5 மணி நேரத்திற்குள் வாங்கிவிட வேண்டுமாம். நேரம் ஆக ஆக, இறந்துபோன ஆடுகளில் கிருமிகள் வந்து சேர்ந்துவிடுமாம்.
எப்போது மட்டன் வாங்கும்போது, ஆட்டுக்கறியை விரல்களால் தொட்டு பார்க்க வேண்டும்.. லேசாக கறியில் விரலை வைத்து அழுத்திவிட்டு, உடனே கையை எடுத்துவிட வேண்டும். அப்போது, பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே அந்த கறி வரும் பட்சத்தில், அது நல்ல கறி என்று அர்த்தம்.. ஒருவேளை, கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. வேண்டாம்.
ஆடுகள்: ஆடுகளை அறுத்து நீண்ட நேரம் தொங்கவிடும்போதுதான், அதன் தசைப்பகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகிவிடுகிறது.. ஒருவேளை, அப்படிப்பட்ட கறியை வாங்கிவந்தாலும், நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணிநேரம் வைத்திருந்துவிட்டு, அதற்கு பிறகே சமைக்க வேண்டும் என்கிறார்கள்.
எனவே, வெள்ளாட்டுக்கறியை வாங்கி, அதிக மசாலா, அதிக எண்ணெய் பயன்படுத்தி சமைக்காமல், மட்டனை கிரில் செய்தோ அல்லது ஆவியில் வேகவைத்தோ சாப்பிடுவது கூடுதல் ஆரோக்கியமாகும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications