செவ்வாழையின் செழிப்பு.. கண், சரும நலனுக்கு தினமும் 1 செவ்வாழைப்பழம் தோல்.. செவ்வாழை ஸ்கிரப் வியப்பு
சென்னை: வாழைப் பழங்களிலேயே அதிக சத்துக்களை கொண்டது செவ்வாழைப்பழம்.. இந்த பழத்தில் உள்ள சத்துக்களை போலவே அதிக சத்துக்களை கொண்டது செவ்வாழையின் தோல்கள் ஆகும்.. இந்த தோல்கள் கண்களுக்கு எப்படி மருந்தாக உதவுகின்றன? சருமத்துக்கு எப்படி மருந்தாகிறது? செவ்வாழை ஸ்கிரப் என்றால் என்ன? முகத்துக்கு எப்படி பயன்படுத்துவது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C, B6, B1, B2, இரும்புச்சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், புரதம், கால்சியம், மக்னீசியம், கோலின், ஃபோலேட், கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த சத்தான பழம்தான் செவ்வாழை.

பழத்தில் சிறந்தது செவ்வாழை
ஆனால், வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவைதான் செவ்வாழையின் தோல்கள்.. செவ்வாழையின் பழத்தை போலவே, இந்த தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளதால், சரும ஆரோக்கியத்துக்கு பேருதவி புரிகிறது. எப்படி தெரியுமா?
செவ்வாழைப் பழத்திலுள்ள மக்னீசியம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் சருமத்திற்கு பாதுகாப்பை தரக்கூடியது.. பீட்டா கரோட்டின், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட், நார்ச்சத்து, வைட்டமின் C போன்றவை செவ்வாழையின் தோலில் நிறைந்திருப்பதால், சரும நோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. தினமும் செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு சரும நோய்கள், தொற்று நோய்க் கிருமிகள் நெருங்குவதில்லை.
நார்ச்சத்து + நீர்ச்சத்து பழம்
செவ்வாழையில் நார்ச்சத்து மட்டுமல்ல, தண்ணீர் சத்தும், ஆன்டி ஆக்ட்சிடெண்ட்டும் அதிகமாக உள்ளதால், சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தினை வழங்குகிறது.. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.. ஈரப்பதத்தை தந்து, சருமத்தில் வரக்கூடிய நமைச்சல், தடிப்பு தன்மையை வரவிடாமல் தடுக்கிறது.. பிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட செவ்வாழை தோலை முகத்தில் வைத்து மசாஜ் செய்வதால், கரும்புள்ளி நீங்கும்.
சோரியாசிஸ் எனப்படும் தடிப்புத் தோல் பாதிப்பு இருந்தால், செவ்வாழை தோலை அங்கு வைத்து தடவி வருவதால் தீர்வினை பெறலாம். முகப்பரு, சிறுசிறு கட்டிகள் இருந்தாலும் செவ்வாழை தோலை கூழ் போல அரைத்து தடவிவிடலாம். அப்படியும் கரையாத மரு, பருக்கள் இருந்தால், இரவு தூங்கும்போது, வாழைப்பழத்தை, மரு மீது இரவெல்லாம வைக்கலாம். மறுநாள் காலையில் அந்த இடத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
"செவ்வாழை ஸ்கிரப்".
முகம் பொலிவு பெற வேண்டுமானால், செவ்வாழைப்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து, காய்ச்சிய பசும் பால், முல்தானி மட்டி, கடலை மாவு போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போல முகம், கழுத்து, கை, கால்களிலும் தடவி 5 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு, 5 நிமிடம் விரல்களால் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இதனால், சருமத்திலுள்ள நுண் கிருமிகள், தூசு மாசுகள், கரும்புள்ளிகள் வெளியேறி இறந்த செல்கள் நீங்கிவிடும்.. வறண்ட சருமம் கொண்டோருக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த "செவ்வாழை ஸ்கிரப்"..!!
மாலைக்கண் நோய்
அதேபோல, வைட்டமின் A சத்துக்கள் நிறைந்த செவ்வாழைப்பழம், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடியது.. தினமும் 100 கிராம் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் நோய்கள் நெருங்குவதில்லை.
ஏனென்றால், இப்பழத்தில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் A உள்ளதால், மாலைக்கண் நோய், கண் எரிச்சல், கண் வலி, கண்களில் உள் அடுக்குகளில் உள்ள தசைகள் பிரச்சனை உள்ளிட்ட பார்வை குறைபாட்டினை தடுக்கிறது..
செவ்வாழைப்பழம் தோல்
கண் பார்வை மங்கலாக தெரிய துவங்கினாலே தினமும் 1 செவ்வாழை சாப்பிடலாம். இரவு உணவுக்கு பிறகு 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் குணமாகும் என்பார்கள்.. இதேபோல, செவ்வாழைப்பழத்தோலும் கண்களுக்கு நன்மை செய்கிறது.
ஏனென்றால், லியூட்டின் சியாக்ஸான்தின் போன்ற சத்துக்கள் கண்களுக்கு கவசம் போல காக்க உதவுகிறது. வைட்டமின் A, ரொடாப்ஸின் உள்ளிட்ட புரோட்டீன்கள், மங்கலான பார்வையை நீக்கி, பளிச்சென கூர்மைக்கு உதவுகிறது.. எனவே, செவ்வாழையின் தோலை கண்களின் மீது வைத்திருப்பதால், கண்களிலுள்ள உஷ்ணங்கள் நீங்குகின்றன.. தண்ணீர் வடிவதும் நிறுத்தப்பட்டு, கண்கள் குளிர்ச்சி பெறுகின்றன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications