உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. ஸ்பெஷலே இதுதான்.. யார் யார் தவிர்க்கலாம்?
சென்னை: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த கிழங்கை சாப்பிடுவதால் தீரும் உடல் உபாதைகள் என்னென்ன தெரியுமா? யாரெல்லாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடக்கூடாது? இந்த கிழங்கின் பக்க விளைவுகள் யாவை?
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில், வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

புற்றுநோய் செல்கள்: வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய சக்தி சர்க்கரை வள்ளிக்கிழங்குகளுக்கு உண்டு.. உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனும் இந்த கிழங்குக்கு உண்டு.
சுவாச பிரச்சினை உள்ளவர்கள், மூட்டுவலி தொந்தரவு, வயிற்றுப்புண் உள்ளவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்த கிழங்கு என்பதால், இதனை சாப்பிடும்போது, உடலுள்ள நச்சுகள், கழிவுகள் வெளியேறும்.. இதனால் உடை எடையும் குறைய துவங்கும். வைட்டமின் A, குளிர்காலத்தில் சரும பாதிப்புகளை தடுத்து நிறுத்துகிறது. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மன அழுத்தத்திலிருந்து மீட்கக்கூடியது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு.
செரிமான கோளாறு: இந்த கிழங்கிலுள்ள B-6 வைட்டமின் சத்துக்கள், அஜீரணத்தை போக்குகின்றன. இதிலுள்ள வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க செய்து, எலும்புகள், பற்களை வலுவாக்குகின்றன.. இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி, நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியையும் ஆதரிக்கின்றன. இதிலுள்ள பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை காத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.
ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.
தவிர்க்கலாம்: சத்துக்கள் பல இருந்தாலும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடாமல் தவிர்க்கலாம். காரணம், ஆக்சலேட்டுகள் உள்ளதால், இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். அதேபோல, அளவுக்கு அதிகமான பொட்டாசியம் இந்த கிழங்கில் உள்ளதால், இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், மருந்துகளை சாப்பிடுபவர்கள் டாக்டரை கேட்காமல் இந்த கிழங்கை சாப்பிடக் கூடாது.
சரும பிரச்சனை உள்ளவர்களும், செரிமானம் பலவீனமாக இருப்பவர்களும், உடல் எடை அதிகம் உள்ளவர்களும், அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை குறைவாக சாப்பிடலாம் அல்லது தவிர்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனை: அளவுக்கு அதிகமாக A வைட்டமின் சாப்பிடும்போது, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், உதடு வெடிப்பது, வறண்ட சருமம் போன்றவற்றை தந்துவிடும்.. மேலும், கல்லீரல் பாதிப்பை வரையும் வரலாம். எனவேதான், யாராக இருந்தாலும், சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
எப்படி சாப்பிடுவது: சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ அல்லது சுட்டோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம்.. அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி பாயாசம் செய்வார்கள்.. பணியாரமும் செய்வார்கள்.. அதேபோல, கொழுக்கட்டையும் செய்வார்கள். சிலர் இந்த கிழங்கை வேகவைத்து மசித்து, கோதுமை மாவில் கலந்து பரோட்டோ போலவும் செய்வார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications