ஆரோக்கியமான நுரையீரல் வேணுமா? மஞ்சளின் மகிமை.. நுரையீரல் வலுவாக வைத்திருக்க சத்தான உணவுகள்.. வாவ்
சென்னை: நுரையீரல் எப்போதுமே ஆரோக்கியத்துடன் செயல்படுவதற்கு சிலவகையான பழங்களை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள். அந்தவகையில், நுரையீரலுக்கு வலு தரும், உணவுகள் என்னென்ன தெரியுமா? நுரையீரலில் நீர்த்தேக்கம் ஏற்பட காரணம் என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலா.
நுரையீரல் பாதிப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.. அதில் முக்கியமானது சிகரெட் பிடிப்பதுதான்.. நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைடு போன்ற ரசாயனங்கள் நுரையீரலுக்குள் நுழைகின்றன..

புகைப்பழக்கம்: இதனால் சளி அதிகமாகி, நுரையீரலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகின்றன.. அத்துடன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் வரை கொண்டுபோகவும் அபாயம் உள்ளது.. அதனால்தான், புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு தொற்றி கொள்கிறது.
அதேபோல உடலுழைப்பு இல்லாதவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.. உட்கார்ந்தே கம்ப்யூட்டர் முன்பு வேலை பார்ப்பவர்களுக்கு உடல் பருமன் மட்டுமல்லாமல் நுரையீரலில் பாதிப்பும் ஏற்படுகிறது.. எனவே, இப்படி உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறையாவது எழுந்து நடக்க வேண்டும்.. முக்கியமாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி இரண்டுமே முக்கியம்.
நுரையீரல் பாதிப்பு: அதேபோல, நுரையீரலில் தொற்றுக்கள் எதுவும் அண்டாதவாறு, பாதுகாக்க வேண்டி உள்ளது. நுரையீரலில் நீர்தேக்கம் இருந்தாலும், உடனடியாக கவனிக்க வேண்டும். சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்று நோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், தொழில்சார்ந்த தொற்று நோய்கள் போன்றவைகளால் நுரையீரலுக்கு தொற்று ஏற்படுகிறது.
மேலும், சர்க்கரை நோய், இருதயநோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவையும் நுரையீரலுக்கு பாதிப்பை தருகின்றன.
ஆரம்ப கட்டம் என்றால் அதாவது நுரையீரலை பாதிக்கும்முன்பேயே சளி, இருமல் என்றால் அதற்கு வீட்டு மருத்துவம் கை கொடுக்கும். மற்றபடி, 10 நாட்களுக்கு மேல் சளி, இருமல் இருந்தாலே டாக்டரை சந்தித்துவிட வேண்டும். இதற்கெல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் முறைகளை கையில் எடுக்கக்கூடாது.
சுவாசப்பாதை: நுரையீரலை பாதுகாக்க வேண்டுமானால், புகை , மது இரண்டையுமே கைவிட வேண்டும்.. உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அத்துடன், சமையலில் எப்போதுமே இஞ்சி, பூண்டு, மஞ்சள், இந்த மூன்றுமே அதிகமாக சேர்ப்பதால், சுவாசப்பாதையை சீராக்கக்கூடியவை.. தொற்றுக்களை நெருங்க விடாது. நுரையீரலும் பாதுகாப்பாக இருக்க உதவும்.
ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த அடங்கிய, மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளையும் அதிகமாக சாப்பிடலாம்.. ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்கள், காய்கறிகளையும் உணவில் அதிகரிக்க வேண்டும.. முக்கியமாக, கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவற்றை தவறவிடக்கூடாது.
தடுப்பூசிகள்: கழிப்பறைக்கு செல்லும் முன்பும், சென்று வந்த பிறகும் கைகளை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உணவுக்கு முன்பும் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்றூநோய் தடுக்க தடுப்பூசிகள் உண்டு. ஒவ்வொரு வருடமும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.. முக்கியமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிமோனியா தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications