இட்லி, தோசைக்கு இனி மாவு அரைக்க வேணாம்.. இதை ட்ரை பண்ணுங்க, 5 நிமிஷத்தில் "ஹெல்த்தி" இட்லி மாவு ரெடி
சென்னை: இட்லி, தோசை மாவு தவிர்க்க முடியாததாகிவிட்ட சூழலில், ரெடிமேட் மாவு மிக்ஸ்களை எப்படி தயார் செய்வது தெரியுமா? இதனை எளிய முறையில் நாமே தயாரிக்கலாம்.
தோசை, இட்லி மற்றும் தோக்லா போன்ற உணவு வகைகளுக்கான, "உடனடி மாவு மிக்ஸ்"களை சத்து மாவாக வகைப்படுத்த முடியாது என்று குஜராத் மாநில ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், இந்த உடனடி மாவு மிக்ஸ்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு: குஜராத் மாநில ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையத்தில், கிச்சன் எக்ஸ்பிரஸ் மேல் முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உண்ணுவதற்கு முன்பு, சில சமையல் செய்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற காரணம் மட்டுமே, நிறுவனத்தின் வாதத்தை நியாயப்படுத்தாது என்று கூறி, இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இது ஒருபுறம் இருந்தாலும், இட்லி தோசைக்கான தேவையானது, வழக்கம்போல் அதிகரித்தே காணப்படுகிறது.. இட்லி தோசை மாவை வீடுகளில் அரைக்க முடியாதவர்கள், அல்லது வேலைக்கு செல்வோர், அல்லது ரூம் எடுத்து தங்கி படிக்கும் மாணவர்கள் போன்றோர் பெரிதும் நம்பியிருப்பது தோசை மாவு பாக்கெட்களைதான்.
அதேசமயம், பாக்கெட் மாவுகளையும் சிலர் விரும்புவதில்லை. அதுபோன்றவர்களுக்கு கை கொடுத்து உதவுவதே இந்த "ரெடிமேட் மாவு மிக்ஸ்" ஆகும்.. இதனை எப்படி செய்வது தெரியுமா?
ரெடிமேட் மாவு: முதலில் அடுப்பில் வாணலை வைத்து, அரிசியை சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும்.. அதாவது சூடு மட்டுமே செய்யவேண்டுமே தவிர பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. அரிசி சூடானதும் ஒரு ஸ்பூன் வெந்தையத்தை அதில் சேர்த்து சூடு செய்ய வேண்டும்.. இதிலேயே அதற்கேற்றபடி உளுந்தையும் அளந்து சேர்த்து சூடு செய்ய வேண்டும். இதில் எதுவுமே வறுக்கக்கூடாது. சூடு செய்த அனைத்து பொருட்களையும் தட்டில் போட்டு ஆறவைக்க வேண்டும்.
இப்போது, மிக்சியை நன்றாக துடைத்துவிட்டு, சூடு செய்துள்ள அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து கொரகொரப்பு இல்லாமல் நன்றாக தூள் செய்ய வேண்டும்.. இதனை ஒரு டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்தாலே 6 மாதங்கள் கெடாமல் இருக்கும்.
பொடி: எப்போது இட்லி, தோசை செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் இந்த பொடியை எடுத்து, சிறிது தண்ணீர், ஈனோ உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.. அதேபோல, தண்ணீரைவிட குறைவான அளவு தயிர் சேர்த்து கரைத்தால், மாவு தயாராகிவிடும். இதில் தோசையோ, இட்லியோ விருப்பம்போல வார்த்து கொள்ளலாம்.
இட்லியை பொறுத்தவரை, சீக்கிரத்திலேயே ஜீரணமாகக்கூடிய உணவாகும்.. இட்லியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், தசைகள் வலிமையடைகின்றன.. புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள ஆரோக்கியமான உணவாகும்..
நன்மைகள்: ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு உள்ளது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தந்து, வயிற்றிலுள்ள புண்களையும் ஆற்றிவிடுகின்றன இட்லிகள்.. நார்ச்சத்தும், இரும்பு சத்தும் அதிகமாக உள்ளதால், இட்லியை தவிர்க்க முடியாது. கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் இட்லியே பிரதான உணவாக உள்ளது..
இட்லி ரவை: இந்த இட்லி மாவு ரெடிமேடு மிக்ஸ் போலவே, வேறுமாதிரியாகவும் நாம் தயாரிக்கலாம். கடைகளில் விற்கும், இட்லி அரிசியிலிருந்து தயார் செய்யப்படும் "இட்லி ரவை"யில் இதனை செய்யலாம். ஒரு வாணலில் உளுந்து சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும். இதனை நைசாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறக, சிறிது அவலையும் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது, இட்லி ரவை 1 கப் என்றால், அரைத்த உளுந்து மாவு அரை கப், அரைத்த அவல் அரை கப் என இந்த 3 பொடியையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் காற்று போகாமல் எடுத்து வைத்து கொள்ளலாம்.
அவல்: 1 கப் இட்லி பொடி என்றால், ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இது குறைந்தது 8மணி நேரமாகவது புளிக்க வேண்டும். அதாவது, காலையில் இட்லி வார்த்தால் இரவில் மாவு கலக்க வேண்டும். இரவில் இட்லி சுடுவதானால் காலையிலேயே கலந்து வைத்துவிட வேண்டும். மொத்தத்தில் 8 மணி நேரம் ஆனதுமே இட்லி மாவு தயாராகிவிடும்...!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications