செருப்பு கிளாத்தி மீனை வாங்குறீங்களா? சத்துள்ள செருப்பு மீனின் ஸ்பெஷல்.. மருத்துவ குணமுள்ள கிளாத்தி
சென்னை: மருத்துவ குணங்கள் நிறைந்த கிளாத்தி மீன்களை பற்றி தெரியுமா? இந்த மீனிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? இந்த மீன்களை எப்படி உணவில் பயன்படுத்துவது? எந்த காலகட்டத்தில் இத்தகைய கிளாத்தி மீன்கள் கிடைக்கும்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மீன்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்த உணவுவகைகள்தான். ஆனால் பெரும்பாலான மீன்களை பற்றி அறியாததால், அவைகளை உணவில் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. அதில் மிக முக்கியமானது இந்த கிளாத்தி மீன்கள்.

கிளாத்தி மீன்கள்: மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மீன்கள் வாழக்கூடியவை.. பார்ப்பதற்கு செருப்பு போன்ற உடலமைப்பும் செருப்பு போன்ற கடினமான தோலமைப்பையும் கொண்டிருக்குமாம் இந்த கிளாத்தி மீன்கள். அதனால்தான், இதனை செருப்பு மீன்கள் என்று அழைக்கிறார்கள்.
இந்த கிளாத்தி மீன்கள் எல்லா காலகட்டத்திலும் கிடைக்காது.. ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் மட்டுமே கிளாத்தி மீன்கள் கிடைக்கும்.. அதிலும், ஒரு படகிற்கு 2,000 கிலோ முதல் 3,000 கிலோ வரையில் கிடைக்குமாம். ஷீலா மீனை போலவே, இந்த மீனின் ருசிகள் இருக்கும். வாவல் மீனை போலவும் இதன் ருசி இருக்கும். இந்த மீனின் நடுவில் மட்டும் முள் எலும்பு போல இருக்கும். ஒரு மீன் 2 முதல் 3 கிலோ வரை வரையில் மட்டுமே இருக்கும்.
செருப்பு மீன்கள்: இந்த மீனில் ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.. புரோட்டீன்களும் அபரிமிதமாக உள்ளன. இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், ரத்தத்திலுள்ள, ரத்த சிவப்பணுக்களை இந்த மீன்கள் அதிகரிக்க செய்கின்றன.. அதேபோல,. இந்த கிளாத்தி மீன்களை சாப்பிடும்போது, உடலிலுள்ள சோடியம் அளவை பூர்த்தி செய்துவிடும்..
இதிலுள்ள பாஸ்பரஸ் செல்லுலார் பாதிப்பை சரிசெய்து புரத உருவாக்கம் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.. அஜீரண கோளாறு இருந்தாலும் அது சரியாகிவிடும். கிளாத்தி மீன்களிலுள்ள கால்சியம் ஊட்டச்சத்துக்கள், எலும்புகள், பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
அபார ருசி: இந்த மீனையும் , மற்ற மீன்களை போல குழம்பு, கிரேவி செய்யலாம்.. சிலர் புட்டு சமைத்து சாப்பிடுவார்கள்.. ஆனால், இதன் தலைப்பகுதியை குழம்பு வைத்து சாப்பிட்டால் அபார ருசியாக இருக்குமாம். ஆனால், சமைக்கும்போது, இந்த தோலை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்கிறார்கள் மீனவர்கள்,
இத்தனை சிறப்புகளை கிளாத்தி மீன்கள் கொண்டிருப்பதால்தான், கேரளா உள்ளிட்ட அரபு மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் கிளாத்தி மீன்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல உள்ளுர் மக்களும் அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.. ஒரு கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறதாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications