ஒட்டகப்பால்.. இயற்கை இன்சுலின்.. இனிப்பான நோய் பற்றிய கசப்பான உண்மை கூறும் டாக்டர் வீ புகழேந்தி
சென்னை: ஒட்டகப் பாலில் இயற்கையிலேயே இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால் சர்க்கரை நோய் முதல் வகை நோய் பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்று மருத்துவர் வீ. புகழேந்தி தெரிவித்துள்ளார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய ICMR-INDIAB ஆய்வில்,இந்தியாவில் 101 மில்லியன் உறுதிசெய்யப்பட்ட சர்க்கரை நோயாளிகளும்,136 மில்லியன் மக்கள் அதற்கு முந்தைய நோய் பாதிப்பிலும்(Pre-Diabetes)உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் 42 கோடி பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது. இதில் 9 கோடி பேருக்கு விழித்திரை(Retina)பாதிப்பு உள்ளது. ஆக, கண்களை சரியான நேரத்தில் நோயாளிகள் பரிசோதித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனில், கண் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் 2025 கணக்குப்படி,உலக சர்க்கரை நோயாளிகளில் 5ல்ஒருவர் இந்தியர். தற்போது அது 7 பேரில் ஒருவராக உள்ளது. 2021 புள்ளிவிபரப்படி,உலக அளவில் 6.7மில்லியன் பேர் சர்க்கரை நோயால் இறந்துள்ளனர். 5 நொடிக்கு 1 உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழப்பிற்கு முக்கிய காரணியாக,இருதய,சிறுநீரக பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில்,50% சர்க்கரைநோய்-2ம் வகை நோயாளிகளில்,ஈரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து(Fatty Liver)பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்சுலின் ஹார்மோன் ஈரல் செல்களில் சரியாக வேலை செய்யமுடியாமல் போகிறது. இதனால் ஈரலிலிருந்து அதிகாலையில் குளுக்கோஸ் அதிகமாக வெளியேற்றப்படுகிறது.
சர்க்கரைநோய்+அதிக எடை சேர்ந்திருப்பவர்களுக்கு,ஈரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது 80% பேருக்கு உள்ளது.
ஈரலில் கொழுப்பு அதிகமிருப்பது சர்க்கரை நோய் பாதிப்பிற்கு காரணமாக உள்ளது. அதே போல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈரலில் அதிக கொழுப்பு(Fatty Liver)சேர்ந்து பாதிப்பை உண்டாக்குகிறது.
உணவு கட்டுப்பாடு மூலம்-800 கலோரி/நாள் எனஒரு வாரம் கடைப்பிடித்தாலே, ஈரலில் அதிக கொழுப்பு சேருவது பெருமளவு கட்டுக்குள் வருகிறது. இந்தியாவில் 39.4 மில்லியன் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தும்(53.1%),நோய் அவர்களுக்கு கண்டறியப்படாமல் இருக்கும் அவலம் உள்ளது.
தமிழகத்தில் 14.4% பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது.பொதுவாக நகர்புறத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாகவும்,கிராமப்புறத்தில் சற்று குறைவாகவும் உள்ளது. சர்க்கரை நோய்-முதல் வகையை எடுத்துக் கொண்டால் 5ல் ஒருநபர்(0-19 வயது)இந்தியரே.
ஒட்டகப் பாலில் இயற்கையிலேயே இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால் சர்க்கரை நோய் முதல் வகை நோய் பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அமுல் நிறுவனம் ஒட்டக பால் பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. 2011-21 இடைப்பட்ட காலத்தில் நுணுக்கமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாடு(Ultra-processed foods)சில்லரை விற்பனையில் 13% அதிகரித்துள்ளது. சாக்லேட்ஸ்,இனிப்பு,உப்பு வகை திண்பண்டங்கள் 10% அதிகமாக இத்தகைய திண்பண்டங்களை தொடர்ந்து உட்கொண்டால்,சர்க்கரை நோய்-2ம் வகை பாதிப்பு ஏற்படுவது 15% அதிகமாகிறது என சமீபத்திய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
சில உணவு வகைகள் 50% வைட்டமின்-டீ தேவையை பூர்த்தி செய்வதாக விளம்பரப்படுத்தப் பட்டாலும் அதில் அதிக சர்க்கரை இருப்பது,மால்டோடெக்ஸ்ட்ரின்,திரவ குளுக்கோஸ் என்ற பெயர்களில் மறைக்கப்படுவதை உணவு பாதுகாப்புக் கழகம்(FSSSI)அதிகம் கண்டுகொள்ளுவதில்லை.
இந்தியாவில் 77 மில்லியன் பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து உலகின் "சர்க்கரை நோய் தலைநகரமாக" விளங்குகிறது. சென்னையில் பெண்கள் மத்தியில் சர்க்கரை நோய்+அதிக எடை பாதிப்பு(Diabesity),வயது அதிகமாக,அதிகமாக கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வில் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது கருக்கலைப்பு ஏற்படுத்துவதை 30-60% அதிகமாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் பாதித்த பெண்கள் மத்தியில் ஆரம்ப மலட்டுத்தன்மை(Primary Infertility)2.7% எனவும்,பின்னர் வரும் மலட்டுத்தன்மை(Secondary Infertility)66.7% என இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுதானிய உணவுகளை உமி நீக்கப்படாத தானியங்கள்,பயறு வகைகள்,வெந்தயப்பொடி போன்றவற்றுடன் சேர்த்து உண்டு வருவது சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுத்துவதை கணிசமாகக் குறைத்தும்,பாதிப்பு வந்த பின் உட்கொள்ளும்போது,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பெருமளவு பலன் அளிக்கிறது.
சிறுதானியங்களின் சர்க்கரை உயர்த்தும் அளவு (Glycemic Index)நடுத்தர அளவில்(Medium GI)இருப்பதால்,அவற்றை எடுத்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மூலம் கொடுப்பது சர்க்கரை நோய் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் சிறுதானியங்களை அரசு பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கினால் சர்க்கரை நோய் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும்.
மாவுச்சத்து(Carbohydrate) அதிகம் நிறைந்த அரிசி போன்ற உணவுகளையே(மாவுச்சத்து பொருட்கள் இன்சுலின் தேவையை அதிகமாக்கி,கணையத்திற்கு அதிக பளுவை கொடுத்து சர்க்கரை நோய் பாதிப்பை உண்டாக்குகிறது.சர்க்கரைநோய் ஆராய்ச்சி குறித்து தமிழகத்தில் தனியார் நிறுவனங்களே அதிகம் பேசி வருகின்றன. அரசு சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் அதிக அக்கறை காட்டவில்லை. ஏன்?
காற்றில் நுண்துகள்கள்(PM 2.5 micron)அதிகமாக இருப்பது சர்க்கரை நோய் பாதிப்பு-2ம் வகையை அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு 10 மைக்ரான்/கனமீட்டர்,வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் போது 25% சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் தரம் அரசு மருத்துவமனைகளில் கேள்விக்குறியாக உள்ளது. மருந்துகளின் தரத்தை அரசு மேம்படுத்த ஜனநாயக சக்திகள் அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

உடற்பயிற்சி செய்தல் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும்,சர்க்கரை நோய் வந்த பின் அதை கட்டுக்குள் வைக்கவும் உதவும். உடற்பயிற்சி செய்தல் கொழுப்பைக் குறைத்து,இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உருவாகாமல் தடுத்தும்,உடற்பயிற்சியின் போது இன்சுலின் துணையின்றி தசைகள் குளுக்கோஸை உள்வாங்குவதும் நடப்பதால்,உடற்பயிற்சி சர்க்கரை நோய் சிகிச்சையில் முக்கிய இடம் பெற வேண்டும். மன அழுத்தமும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதால் மன அமைதி அனைவருக்கும் கிடைக்க அரசு தக்க சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மேற்சொன்ன செய்திகளை கருத்தில் கொண்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள,சர்க்கரை நோய் தினத்தில் மக்கள் நலனை பாதுகாத்திட உறுதிஏற்றால் சிறப்பாக இருக்கும்.
மரு.வீ.புகழேந்தி.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications