மீண்டும் மிரட்டும் மங்கிபாக்ஸ்.. சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்தது WHO
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை ஹூ வெளியிட்டுள்ளது. மங்கி பாக்ஸ் தொற்று எப்படி பரவும், அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மங்கி பாக்ஸ் (குரங்கம்மை) என்பது கொரோனா பெருந்தொற்று போல புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. அது ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக எண்டமிக் நோயாகவே இருந்து வந்தது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகம் காணப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது, 2022-ல் குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த நோய் பரவல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து நோய் பரவலின் தீவிரம் குறைந்தது.
இந்த நிலையில், குரங்கம்மை நோயை மீண்டும் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை தொற்று பரவியதால் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை தொற்று எளிதாக பரவக் கூடியது.
சுகாதார அவசர நிலையாக மங்கி பாக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் அம்மை பாதிப்பில் ஏற்படுவதைப் போலக் கொப்புளங்கள் ஏற்படும். இது தான் மங்கி பாக்ஸின் முக்கிய அறிகுறியாகும். மேலும், காய்ச்சல், தசைவலி, சளி ஆகியவையும் ஏற்படும்.
இது கொரோனாவை போல காற்றில் பரவக் கூடியது இல்லை. மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடன் நீண்ட நேரம் நேருக்கு நேரடி தொடர்பில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும், குரங்கம்மையால் நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பாதிப்பு பரவும்.
மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் தற்போது வரை இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் தனிமையில் இருக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுவாக 15 நாட்களில் குணமடைந்துவிடும்.

காங்கோவில் இருந்து புருண்டி, கென்யா, ரவாண்டா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் பரவியுள்ள நிலையில், தற்போது உலக சுகாதார மையம் சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நோய்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications