உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த இந்தியா.. அமெரிக்கா, ரஷ்யாவால் செய்ய முடியாததை செய்து காட்டி அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலும் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படி இருக்கையில் போர் விஷயத்தில் மொத்த உலகத்திற்கும் இந்தியா பாடம் எடுத்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கோள் காட்டி, ஒரு போர் எப்படி இருக்க வேண்டும்.. அதன் இலக்கு என்னவாக இருக்க வேண்டும்.. என்பது குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விளக்கியிருக்கின்றனர்.

'யுரேஷியன் டைம்ஸ்' செய்தி ஊடகத்தில் இது குறித்து கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த 88 மணி நேர வான்வழிப்போர் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யாவால் கூட செய்ய முடியாதது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்களையும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

India

ஆபரேஷன் சிந்தூர் காரணம்

கடந்த ஆண்டு ஏப்.22ம் தேதி ஜம்மு காஷமீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாகதான் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு மே.7ம் தேதி அதிகாலை 1 மணையளவில் இந்திய ஆயுத படைகள் இந்த ஆபரேஷனை தொடங்கின.

இந்திய விமானப்படையின் விமானங்கள் வெறும் 23 நிமிடங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 முக்கிய பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன.

உள்நாட்டு ஆயுதங்கள்

வரலாற்றில் முதல்முறையாக எல்லை பகுதியை தாண்டி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூர் (ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகம்), முரத்கே (லஷ்கர்-இ-தொய்பா தளம்) போன்ற மிக ஆழமான பகுதிகளில் இருந்த இலக்குகள் மிக துல்லியமாக தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தாக்குதலுக்கு உலகத்தரம் வாய்ந்த ஆயுதங்களுடன் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதுதான்.

கடற்படையின் பலம்

SCLAP & HAMMER ஏவுகணைகள் இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தன. இவை, டேரார்களின் கண்ணில் மண்ணை தூவி, எதிரி எல்லைக்குள் புகுந்து தாக்கும் திறன் கொண்டவை. SkyStriker ட்ரோன்கள் தற்கொலை தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்டவை. இவை இரண்டும் இலக்குகளை துல்லியமாக தாக்கின. இது போக.. இந்திய கடற்படை அரபிக்கடலை முழுமையாக கன்ட்ரோலில் எடுத்தது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் படைப்பிரவு.. பாகிஸ்தான் கடற்படை கப்பல்களை கராச்சி துறைமுகத்தைவிட்டு வெளியே வராதவாறு முடக்கியது.

அமெரிக்காவால் செய்ய முடியாதது

தற்போதைய உக்ரைன் போரில் ரஷ்யாவோ, அல்லது மத்திய கிழக்கில் ஈரான் விஷயத்தில் அமெரிக்காவோ செய்ய தவறிய ஒரு விஷயத்தை இந்தியா சாதித்து காட்டியது என்று யுரேஷியன் டைம்ஸ் கூறியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா நடத்தும் போர்கள் பல மாதங்கள் அல்லது வருடங்களாக நீடித்து.. உலக பொருளாதாரத்தை பாதித்து தெளிவான முடிவின்றி தொடர்கின்றன. ஆனால், இந்தியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்குமபோதே அதன் அரசியல் இலக்கை தெளிவாக வரையறுத்ததாக யுரேஷியன் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

88 மணி நேரம்

போரில் முக்கியமான விஷயம், எப்போது தொடங்குகிறோம் என்பதுதான். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அதை எப்போது நிறுத்துகிறோம் என்பது. இந்த விஷயத்தை இந்தியா சரியாக செய்திருக்கிறது. இந்தியாவின் நோக்கம் பயங்கரவாத கட்டமைப்புகளை அழிப்பது மட்டும் தவிர, பாகிஸ்தானின் நிலப்பரப்பை கைப்பற்றுவதோ.. அப்பாவி மக்களை கொல்வதோ அல்ல. சரியாக 88 மணி நேரத்திற்குள் இலக்குகள் எட்டப்பட்டவுடன் போர் மேலும் தீவிரமடையாமல் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

அணு ஆயுத அச்சுறுத்தல்

இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை கொண்டவை என்ற போதும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுககு பணியாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று இந்தியா வெற்றிகரமாக போரை முடித்துக்காட்டியது. இந்த விஷயத்தில் இந்தியாவின் அதிரடி துணிச்சலையும், அதே நேரத்தில் அது கையாண்ட ராஜதந்திர கட்டுப்பாட்டையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன. இந்த காரணங்களால்தான் நவீன போர்களை எவ்வாறு குறுகிய காலத்தில் உலக பாதிப்புகள் இல்லாமல் துல்லியமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் ஓர் உலகளாவிய பாடம் என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுவதாக யுரேஷியன் டைம்ஸ் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+