மிரண்ட ED.. மலையாக குவிந்து கிடந்த ரூ.12 கோடி பணம்.. சிக்கிய கர்நாடகா காங்கிரஸ்எம்எல்ஏ.. ஷாக் தகவல்
பெங்களூர்: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பியை அதிரடியாக கைது செய்து ரூ.12 கோடி ரொக்கம், ஒரு கோடி வெளிநாட்டு பணம், ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கேசி வீரேந்திர பப்பி. கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கேசி வீரேந்திர பப்பி பல இடங்களில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கோவா, சிக்கிம் உள்பட பல இடங்களில் கேசினோ நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் கேசி வீரேந்திர பப்பியின் வீடு, அலுவலகம், அவரது சகோதரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வீரேந்திர பப்பி மட்டுமின்றி அவரது சகோதரர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று பலரது வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்தன. சித்ரதுர்கா, பெங்களூர், கோவா உள்பட மொத்தம் 31 இடங்களில் சோதனைகள் நடந்தன. குறிப்பாக கர்நாடகாவில் 15 இடங்கள், கோவாவில் 5 கேசினோக்கள், மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சோதனையை தொடர்ந்து சிக்கிம் மாநிலம் கேங்டோக்கில் பதுங்கியி வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அங்கு அவருக்கு சொந்தமான கேசினோ இருக்கிறது. அங்கு பதுங்கியதை அறிந்த அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும் சோதனை பற்றியும், பறிமுதல் செய்யப்பட்டவவை பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ரூ.12 கோடி ரொக்கப்பணம், ஒரு கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணங்கள், ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 4 வாகனங்கள், சொத்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர 17 வங்கி கணக்குகள் மற்றும் 2 வங்கி கணக்குகளின் லாக்கர்கள் முடக்கப்பட்டு உள்ளது.
கைதான எம்.எல்.ஏ. வீரேந்திர பப்பி இதற்கு முன்பு அவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்தார். கடந்த 2016ம் ஆண்டும் அவரது வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.5 கோடி ரொக்கம், 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்திருந்தனர். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நகை, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கேசி வீரேந்திர பப்பியின் பின்னணியில் அவரது சகோதரர் கேசி திப்பேசாமி மற்றும் சகோதரர் மகன் பிருத்வி ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் துபாயில் இருந்து கொண்டு ஆன்லைனில் கேம்கள் மூலம் பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications