தேனிலவில் பயங்கரம்.. கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்ற மனைவி
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவில் தேனிலவுக்காகப் போன இடத்தில் கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளி அவரது மனைவி கொன்று விட்டார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படிக் கணவரைப் போட்டுத் தள்ளி விட்டார் மனைவி.
அந்தப் பெண்ணின் பெயர் ஜோர்டான் லின் கிரஹாம். இவர் மீது கணவர் கோடி-யை கொலை செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்துள்ளது. கிளேசியர் தேசியப் பூங்கா என்ற மலைப் பகுதிக்கு தேனிலவுப் பயணமாக போயிருந்தபோது இந்தக் கொலை நடந்தது.
முன்னதாக, 22 வயதாகும் ஜோர்டான் லின் கிரஹாம், தனது கணவர் அவரது நண்பருடன் காரில் போனதாகவும் அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீஸ் விசாரணையின்போது தனது செயலை அவர் ஒப்புக் கொண்டார்.
கோடியின் உடல் மலை அடிவாரத்தில் ஜூலை 12ம் தேதி மீட்கப்பட்டது. மலை உச்சியிலிருந்து விழுந்ததால் அவரது உடம்பில் எலும்புகள் நொறுங்கிப் போய் விட்டன.
ஜூலை 7ம் தேதிதான் இவர்கள் இருவருக்கும் திருமணமானது. அதன் பிறகு என்ன காரணத்திற்காகவோ கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தேனிலவுப் பயணத்தில் அது சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொலை வரை போய் விட்டார் ஜோர்டான் லின்.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications