சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தீவிர ரசிகர்
கலம்பா: காமிக்ஸ் நாயகனான சூப்பர் மேன் போன்று தோன்றுவதற்காக, ரசிகர் ஒருவர் கடந்த 16 வருடங்களில் கிட்டத்தட்ட 13 ஆபரேஷன்கள் செய்து கொண்டுள்ளாராம்.
நியாயம், நீதி மற்றும் நேர்மைக்காக போராடும் காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர்மேன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமானது. முதலில் காமிக்ஸ் கதாபாத்திரமாக ஆரம்பித்த சூப்பர் மேனின் பயணம் நாளடைவில் டிவி, சினிமா என தன் புகழின் எல்லையை விரிவாக்கியது.
இது போன்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களைப் பார்க்கும் அனைவருக்கும் தாங்களும் அது போன்று மாறி சாகசங்கள் செய்ய வேண்டும் என ஆசை தோன்றுவது இயல்பு தான். ஆனால், அதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் என்ன செய்திருக்கிறார் எனப் பாருங்கள்....

சூப்பர் மேன் ஆசை....
பிலிப்பைன்ஸ், கலம்பா நகரத்தைச் சேர்ந்த 35 வயது ஹெர்பர்ட் சாவேஸ்க்கு 5 வயதில் அறிமுகமானது தான் சூப்பர்மேன் கதாபாத்திரம்.சூப்பர்மேன் செய்யும் சாகசங்களை தொலைக்காட்சியில் பார்த்த ஹெர்பர்ட்டுக்கு தானும் அதுபோல மாற வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது.

13 அறுவைச் சிகிச்சைகள்....
சூப்பர் மேன் போன்று மாறுவதற்காக இதுவரை 13 அறுவைச்சிகிச்சைகளைச் செய்துள்ளாராம் ஹெபர்ட். மூக்கு அறுவை சிகிச்சை, தோல் வெண்மை நிறமாக மாறுதல், தாடை மறுசீரமைப்பு, உதடு சமன்செய்தல் மற்றும் தோள்கள் சீரமைப்பு சிகிச்சை என அவரது அறுவை சிகிச்சைகளைப் பட்டியலிடலாம்.

செலவு அதிகம்...
அறுவைச் சிகிச்சைகளுக்கான செலவு 4,400 பவுண்டுகளைத் தாண்டுமாம். இது பிலிப்பைன்ஸ் நாட்டு மதிப்பின்படி 3 லட்சம் பெசோஸ். அந்நாட்டில் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு வழங்கப்படும் சம்பளம் 90 பெசோக்கள் ஆகும்.

சூப்பர் மேனாக தோற்றம்....
எப்போது வெளியில் சென்றாலும், ஹெர்பர்ட் சூப்பர்மேன் ஆடைகளை உடுத்தியபடியும், தலையில் ஜெல் தடவி தனித்துவமாக தெரியும் வகையில் செல்வதும் வழக்கம்.

நல்வழிபடுத்தும் பணியில்....
இதற்காக கடந்த 30 வருடங்களாக சூப்பர்மேன் போன்று தன்னை அணு, அணுவாக மாற்றி கொண்டு வந்துள்ளார் ஹெபர்ட். சிறு குழந்தைகளுக்கு நல்ல கதைகளை போதிக்கும் பணியை மேற்கொள்வதை தனது நோக்கமாக கொண்டு செயல் பட்டுவருகிறார்.

சூப்பர் மேன் கலெக்ஷன்ஸ்....
உலக அளவில், புதிய முயற்சியாக 3 முழு உருவ சூப்பர்மேன் சிலைகள் உட்பட இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூப்பர்மேன் தொடர்பான பொருட்களை சேகரித்து வைத்துள்ளார் ஹெபர்ட்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications