சூப்பர் மேனின் 75ம் ஆண்டு நிறைவுவிழா: 7 ‘சூப்பர்’ தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்ட கனடா
டொரண்டோ: பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர் மேனின் 75வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 7 தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது கனடா.
உண்மை, நீதி மற்றும் நியாயத்திர்குப் போராடும் காமிக்ஸ் கதாபாத்திரம் சூப்பர்மேன். இந்த காமிக்ஸ் ஹீரோ தோன்றி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாம். அதனைக் கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற அந்தவிழாவில், 7 புதிய நாணயங்களை வெளியிட்டது ராயல் கனடா மின்ட். இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை.

நீதிக்காக போராடும் சூப்பர்மேன்....
உண்மைக்காக, நீதிக்காகப் போராடும் சூப்பர்மேன் கதாபாத்திரம், கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோரால் 1938ம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க ஆண்டு....
சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் 75வது ஆண்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாணயங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

சூப்பர் மேன் தோற்றம்....
கடந்த 1938ம் ஆண்டு வெளியான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை மற்றும் தி நியூ 52 என்ற காமிக்ஸ் புத்தக கதாபாத்திரத்தில் இருந்து சூப்பர்மேனின் புதிய உடையுடன் கூடிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு நாணயமும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஷஸ்டர் வடிவம்....
ஷஸ்டர் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ள 14 காரட் தங்க நாணயம் 750 டாலருக்கு விற்கப்பட்டு உள்ளது. மற்ற 6 நாணயங்கள் 29.75 டாலர் முதல் 129.75 டாலர் வரை விலை கொண்டவை.

சினிமா....
காமிக்ஸ்ல் இருந்து சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு சினிமா மற்றும் டிவி தொடர்கள் உருவாக்கப்பட்டன.

ஸ்மால்வில்லி தொடர்....
இந்த ஸ்மால்வில்லி தொடர்களில் பெரும்பாலும் கனடா நாட்டை சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். லாய்ஸ் லேன் ஆக தோன்றும் எரிக்கா டியூரன்ஸ், ஜிம்மி ஆல்சன் ஆக தோன்றும் ஆரன் ஆஷ்மோர் மற்றும் லானா லேங் ஆக தோன்றும் கிறிஸ்டின் கிரியூக் ஆகியோர் கனடாவை சேர்ந்தவர்களே. ஸ்மால்வில்லி தொடர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் படமாக்கப்பட்டவையே ஆகும்.

கனடா நாட்டுடன் தொடர்புடையவர்கள்....
இதுவரை வந்த சூப்பர்மேன் படங்களில் நான்கில் மார்கட் கிட்டர், லாய்ஸ் லேன் ஆக நடித்துள்ளார். மேலும், கிறிஸ்டோபர் ரீவ் என்பவரும் வட கனடாவைச் சேர்ந்தவரே ஆவர். பெரும்பாலும், சூப்பர்மேன் கதாபாத்திரத்துடன் நடித்துள்ள நடிகர்கள் கனடா நாட்டுடன் தொடர்பு கொண்டவர்களே.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications