சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் வேலை.. மாதம் ரூ.69 ஆயிரம் சம்பளம்.. தேதி முடியப் போகுது! மறந்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,130 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

மத்திய தொழில்பாதுகாப்பு படை(CISF)யில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,130 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் அதிமுக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்படுகின்றது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க ஓரிரு நாளே அவகாசம் உள்ளது. அதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பித்து விடுங்கள்.

job employment

பணியிடங்கள்: நாடு முழுவதும் மொத்தம் 1,130 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கான்ஸ்டபிள் / தீ அணைப்பு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாநில வாரியாக பார்த்தால் தமிழகத்தில் 39 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 18 பணியிடங்களும், கர்நாடகாவில் 33 பணியிடங்களும் உள்ளன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: கான்ஸ்டபிள்/ தீயணைப்பு வீரர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 23 ஆகும். வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 28 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 26 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை உடல் திறன் தேர்வு (PET), உடல் தகுதி தேர்வு (PST), சான்றிதழ் சரிபார்ப்பு, கணிணி வழியிலான எழுத்து தேர்வு (சிபிடி), மருத்துவ பரிசோதனை ஆகியவைகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 31.08.2024; விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024. இன்னும் 2 தினங்களில் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்துவிடுகிறது. எனவே தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://cisfrectt.cisf.gov.in/ கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+