இந்திய கடற்படையில் வேலை.. 1,266 பணியிடங்கள்! ரூ.63 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு + ஐடிஐ தகுதி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கடற்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,266 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் முப்படைகளில் ஒன்றாக இந்திய கடற்படை விளங்குகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கடற்படையைப் பொறுத்தவரை அதில் உள்ள பணிநிலைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

job Employment chennai

பணியிடங்கள் விவரம்:

அந்த வகையில் தற்போது கடற்படையில் காலியாக உள்ள Tradesman (Skilled) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 1,266 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

சிவில் பணிகள், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், அட்வான்ஸ் மெஷின்ஸ் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 1,266 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தேர்வர்கள் பணியிடங்கள் விவரம் மற்றும் கல்வித் தகுதியை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின் படி தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

டிரேட்ஸ்மேன் (Skilled) பணிக்கு மத்திய அரசின் Pay Commission Level 2 படி சம்பளம் வழங்கப்படும். சம்பளமாக ₹19,900 - ₹63,200 வரை அளிக்கப்படும். தேர்வு முறையைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வும், திறன் தேர்வும் அடிப்படையாகி தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 02.09.2025 ஆகும். விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறைக்கு மேல் நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.joinindiannavy.gov.in/en/page/why-join.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+