தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்.. லட்சங்களில் சம்பளம்.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் உள்ளதாகவும்,தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில காலியாக உள்ள கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பணியிடடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து தேர்வு முறைகளும் அரசாணையின் படி, அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் http://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக 09.02.2024 முதல் விண்ணப்பிப்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 1933
உதவிப் பொறியாளர் (மாநகராட்சி): 146 (dma)
உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்): 145 (cmwssb)
உதவிப் பொறியாளர் (நகராட்சி) 80 (டிஎம்ஏ)
உதவிப் பொறியாளர் (சிவில்) 58 (twadb)
உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்) 14 (twadb)
உதவிப் பொறியாளர் (எலக்டிரிக்கல்) 71 (cmwssb)
உதவிப் பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி) 156 (dma)
நகரமைப்பு அலுவலர் (நிலை-II)
உதவிப்பொறியாளர் (திட்டம் ) (நகராட்சி) 12 (dma)
இளநிலை பொறியாளர் : 24
தொழில் நுட்ப உதவியாளர் 257
வரைவாளர் (மாநகராட்சி) 35
வரைவாளர் (நகராட்சி) 130
பணிமேற்பார்வையாளர் 92
நகர ஆய்வாளர் மற்றும் இளநிலை பொறியாளர் (திட்டம்): 367
துப்புரவு ஆய்வாளர் (மாநகராட்சி மற்றும் நகராட்சி) 244
ஊதியம் எவ்வளவு: பணி ஆய்வாளர் பணிக்கு 18 200 முதல் 67100, அதேநேரம் மற்ற பணிகளுக்க ரூ. 35 400 முதல் 130400 வரையிலும், 37 700 முதல் 138 500 வரை சம்பளம் கிடைக்கும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2024 ( நேரம் மாலை 5.45 மணி வரை). விண்ணப்பங்களை மார்ச் 13 முதல் மார்ச் 15ம் தேதி வரை திருத்தலாம். பிறகு விண்ணப்பங்களை திருத்த முடியாது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: http://tnmaws.ucanapply.com. கல்வி தகுதி உள்ளிட்ட முழு விவரங்களை இந்த இணையதளத்திலேயே அறியலாம்.
தேர்வுகள் நடைபெறும் நாட்கள் : ஜூன் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும்.

-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications