அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளிலும் ஆசிரியர் பணியிடங்களிலும் நிறைய காலி பணியிடங்கள் இருக்கின்றன. இவை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு மூலமும் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தோதுவாக இருக்கும் மாவட்டங்களுக்குள் இடமாறுதல் கோரி அதை பெற்றுக் கொண்டனர்.
அந்த ஒரு மாதம் நடந்து முடிந்த கலந்தாய்வின் முடிவில் அரசு பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது. அதிலும் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 892, திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுகையில் 379, சேலத்தில் 289 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஆனால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுரி ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் காலியாக இல்லை. அது போல் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியரில் 2000-க்கும் மேற்பட்ட இடங்கள், பட்டதாரி ஆசிரியரில் 2600 வரை காலியிடங்கள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் வரை கூடுதலாக தேவைப்படுவார்கள் என தெரிகிறது. இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,582 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 2768 இடை நிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் மூலம் 5,368 காலிபணியிடங்கள் வரை நிரப்பப்படும். மீதமுள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆசிரியர் பணியடங்களை நிரந்தமாக நிரப்புவதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா, அரசு தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு 12 ஆம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் தொடக்கக் கல்வி டிப்ளமோ அல்லது 4 ஆண்டுகள் தொடக்கக் கல்வி பிரிவில் இளங்கலை டிகிரி அல்லது 2 ஆண்டுகள் கல்வி பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
டிகிரியுடன் 2 ஆண்டுகள் தொடக்கக் கல்வி டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக டெட் தேர்வு தாள் 1 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வைக்கப்படும். இதில் பொது பிரிவினர் 60 சதவீத தேர்ச்சியையும் பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத தேர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் 20,600- 65,500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications