Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உன்னத உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை.. கொட்டி கிடக்குது வேலை வாய்ப்பு! மாதம் 17,000 வரை சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: இந்தியா முழுவதும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவி மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 17,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

1. மருத்துவ உதவியாளர் பணி:

கல்வித்தகுதி : B.Sc நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க ) 4ល់ Life Science Graduates (B.Sc Zoology, Botony, Bio-Chemisty, Micro-biology, Bio Technology)

jobs dindigul 108 ambulance 108


மாத ஊதியம் ரூ.16,990/- மொத்த ஊதியம்)

பாலினம் : ஆண் மற்றும் பெண்

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

குறிப்பு : 1. தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும் (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்)

2. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.16790/- (மொத்த ஊதியம்)

வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம் : ஆண் மற்றும் பெண்

உயரம் : 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் தகுதி : இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: 1. எழுத்துத் தேர்வு, 2.தொழில் நுட்பத் தேர்வு 3.மனிதவள துறை நேர்காணல், 4.கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, 5. சாலை விதிகளுக்கான தேர்வு.

குறிப்பு : தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை, மருத்துவமனை, மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி உண்டு)

பணி நேரம் : 12 மணி நேரம் Shift என்ற முறையில் இரவு பகல் என மாறும்

குறிப்பு : நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதல்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும்

தேதி: 24.12.2024, செவ்வாய்க் கிழமை காலை : 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இடம்: பழைய நீதிமன்ற வளாகம், திண்டுக்கல். (திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில்)

தொடர்புக்கு: 044-28888060 / 044-28888075 / 044-28888077 என்ற எண்களில் சந்தேகங்கள் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+