Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. மத்திய அரசில் சூப்பர் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பான ஐஎப்எஸ் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்திய வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பான ஐஎப்எஸ் (இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரஸ்ட் பயோடைவர்சிட்டி) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 10th pass is enough, Central Govt Forest Department Vacancy Notification - How to apply

பணியிடங்கள் - பணி விவரம்: Lower Division Clerk (லோயர் டிவிஷன் கிளார்க்) என்ற பதவிகு 1 பணியிடமும் Multi Tasking Staff (மல்டி டாஸ்கிங் ஸ்டாப்) பதவிக்கு 5 பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐதராபாத்தில் பணியமர்த்தப்படுவார்கள். எனினும் தேவைப்படும் பட்சத்தில் இந்தியா முழுவதும் பணியில் அமர்த்தப்படுவர்.

கல்வித்தகுதி: லோயர் டிவிஷன் பிளஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி டைப்பிங் எந்திரத்தில் ஒரு நிமிடத்திற்கு 30 (ஆங்கிலம்) வார்த்தைகள், 25 இந்தி வார்த்தைகள் டைப்பிங் செய்யும் அளவுக்கு திறன் பெற்றிருக்க வேண்டும். இதேபோல் கணினியில் ஒரு நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் அளவுக்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பதவிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். அது போக தோட்டக்கலை/எலக்ட்ரிக்கல் வொர்க்/துப்புரவு பணிகள்/வாகன மெக்கானிக்/ பிளம்பிங் அலுவலக பொருட்களை கையாள்வதில் 3 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு: லோயர் டிவிசன் கிளார்க் பதவி மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பதவிக்கு விண்ணிப்பிப்பவர்கள் 18 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும் அதிகபட்ச வயது 27 மிகாமல் இருக்க வேண்டும். எஸ் சி/ எஸ்.டி ஐந்து ஆண்டுகள் தளர்வு கொண்டு உண்டு.

சம்பளம் விவரம்: Lower Division Clerk - பணிக்கு ரூ. 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும். Multi Tasking Staff பணிக்கு ரூ. 18,000 முதல் 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அதன் பிறகு டெக்னிக்கல் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை தேர்வில் மட்டும் மார்க் பெற்று டெக்னிக்கல் தேர்வில் தோல்வியடைந்தால் பணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்.

தேர்வு கட்டணம்: விருப்பம் உள்ள மாணவர்கள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். டிடி மூலமாக மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி: ஆர்வமுள்ள/தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை "The Director, Institute of Forest Biodiversity, Dulapalli, Kompally S.O., Hyderabad - 500 100' என்ற முகவரிக்கு தபால் மூலம் 31.07.2023 என்ற தேதிக்குள் சென்றடையும்படி விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் முடியுமே தவிர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்னப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் (https://ifb.icfre.gov.in/jobs/vacancy164.pdf) செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+