எஸ்பிஐ வங்கியில் வேலை.. 131 எஸ்.ஓ பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சென்னை: எஸ்பிஐ வங்கியில் 131 (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன உளிட்ட விவரங்களை பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்.பி.ஐ வங்கியில் சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு இன்றி நேர்முகத்தேர்வுமூலமாக மட்டுமே இந்தபணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
மேனேஜர் கிரெடிட் அனலிஸ்ட் - 50 பணியிடங்கள்
அசிஸ்டண்ட் மேனேஜர் (செக்யூரிட்டிஅனலிஸ்ட்) - 23
டெபுட்டி மேனேஜர் (செக்யூரிட்டி அனலிஸ்ட்) - 51
மேனேஜர் (செக்யூரிட்டி அனலிஸ்ட்) - 09
அசிஸ்ட்ண்ட் ஜெனரல் மேனேஜர் (அப்ளிகேஷன் செக்யூரிட்டி) - 03
சர்க்கிள் டிஃபென்ஸ் வங்கி ஆலோசகர் - 1.
என மொத்தம் 131 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: மேனேஜர் கிரெடிட் அனலிஸ்ட் பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புன் எம்பிஏ பைனான்ஸ் / பிஜிடிபிஏ / பிஜிடிபிஎம் /எம் எம் எஸ் / சிஏ / சிஎப் ஏ/ ஐசிடபிள்யூ முடித்து இருக்க வேண்டும். அசிஸ்ட்ண்ட் மேனேஜர் மற்றும் டெபுட்டி மேனேஜர் (செக்யூரிட்டி அனலிஸ்ட்) - பி இ / பிடெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)/ஐடி/ எலக்ட்ரானிஸ்/ எலக்ட்ரனிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட்ரானிஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமண்டேஷன் / எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி/ எம்.சி.ஏ ஆகிய ஏதேனும் ஒரு படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சர்க்கிஸ் டிபென்ஸ் பேங்கிங் அட்வைசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் அந்தஸ்து அல்லது பிரிகேடியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். துறைசார்ந்த பிரிவில் அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வி தகுதி முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 36 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ரூ.1,00,350 கிடைக்கிறது.
வயது வரம்பு:
மேனேஜர் கிரெடிட் அனலிஸ்ட்: 25 முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அஸ்சிஸ்ட்ண்ட் மேனஜேர் (செக்யூரிட்டி அனலிஸ்ட் )- அதிகபட்ச வயது வரம்பு 30.
டெபுட்டி மேனேஜர்: அதிகபட்ச வாய்து வரம்பு 35.
மேனேஜர் செக்யூரிட்டி அனலிஸ்ட்: அதிகபட்ச வயது வரம்பு 38.
அசிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜர்: அதிகபட்ச வயது வரம்பு 42.
சர்கிள் டிஃபென்ஸ் பேங்கிங் அட்வைசர்: அதிகபட்ச வயது வரம்பு 60.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்னப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம். விண்ணப்பிக்க 04. 03. 2024 கடைசி நாளாகும். அதாவது இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிகிறது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் / ஒபிசி / EWS- ஆகிய பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க https://bank.sbi/documents/77530/36548767/12022024_CRPD_SCO_2023_24_32.pdf/54f03a08-b227-06e1-3c86-6ad62c7a3c6b?t=1707747700819 இங்கே கிளிக் செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications